• July 27, 2024

“கௌரவர்களில் மூத்தவன் யுயுத்சு.. யார் இவன்? – வியக்க வைக்கும் உண்மைகள்..

மகாபாரதம் பழமையான இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை மையமாகக் கொண்ட கதை. இந்தக் கதையில் பஞ்சபாண்டவர்கள் ஐவர். அவர்களின் பெயர் யுதிஷ்டன், பீமன், அர்ஜுனன் நகுலன் மற்றும் சகாதேவன்.

 

இதுபோலவே கௌரவர்கள் 100 பேர் இதில் மூத்தவன் துரியோதனன் திருதராஷ்டிரனின் மகன் ஆவார். பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் குருசேத்திரப் போர் என்று கூறப்படுகிறது. இதுதான் மகாபாரதத்தின் மையக்கரு என்று கூட கூறலாம்.

 

இந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அழுத்தமான மற்றும் யதார்த்தமான வாழ்வியல் நியதிகளை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Yuyutsu
Yuyutsu

இதில் அதிக அளவு தெரியப்படாத நபரான யுயுத்சு ஒரு தனித்துவமான கதாபாத்திரம் என்று கூறலாம். இவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே பிறந்தவர்தான் இந்த யுயுத்சு.

 

அப்படிப்பட்ட இவரை துரியோதனனின் சகோதரன் என்று கூறலாம். ஏனென்றால் இவர் தான் துரியோதனனுக்கு மூத்தவர். அப்படி இருக்கும் வேளையில் இவர் ஏன் குருசேத்திர போரில் கௌரவரோடு நிற்கவில்லை என்று நீங்கள் கருதலாம்.

 

இதற்கு காரணம் யுயுத்சு நீதியை உணர்ந்து நீதியின் பக்கத்தை தேர்வு செய்ததால் கௌரவர்கள் இடையே சேராமல் மகாரத்தியாக செயல்பட்டார். அட… மகாரத்தியா அது என்ன மகாரத்தி? என்று நீங்கள் யோசிக்கலாம்.

 

அதற்கான பதில் என்னவென்றால் குருசேத்திரப் போரில் இரண்டு தரப்பிலும் மகாரத்திகள் இருந்தார்கள். இவர்கள் மிகப்பெரிய போர் வீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இதற்கு காரணம் இந்த வீரர்கள் ஒரே நேரத்தில் 7 லட்சத்தில் இருபதாயிரம் வீரர்களை எதிர்த்து போராடும் போர்க்குணம் நிறைந்தவர்களாகவும், சாதுரியமான தந்திரங்களை கொண்டவர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள்.

 

மேலும் இதுபோல மகாரத்திகள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் சேனையில் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் கௌரவர்களின் தரப்பில் பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா, கிருபாச்சாரி, சல்லியன் மற்றும் ஜெயசந்