• July 27, 2024

மாயன் இனத்தவர்கள் தமிழர்களா? – ஆச்சரியத்தை தூண்டும் ஆய்வு அலசல்..!

 மாயன் இனத்தவர்கள் தமிழர்களா?  – ஆச்சரியத்தை தூண்டும் ஆய்வு அலசல்..!

Mayan

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு வகையான நாகரீகங்கள் தழைத்து ஓங்கி மனித நாகரீகத்தில் நம்மை திளைக்க வைத்துள்ளது. அந்த வகையில் மிகப் பழமையான நாகரீகமாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், ரோமன் நாகரிகம் போன்றவற்றை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக நாம் கூறலாம்.

 

இதைப் பற்றி விரிவாக கிப்பன் எழுதிய “ரோமப்பேரரசின் வீழ்ச்சியும் நலிவும்” என்ற நூலிலும்,பால் கென்னடி எழுதிய “பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நூல்களில் படிக்கும் போது விரிவான விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

மேலும் அமெரிக்க நாட்டில் தோன்றிய மாய நாகரிகம் மற்றும் இன்கா நாகரிகம் பற்றி இதுவரை விரிவாக எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாத காரணத்தால் அந்த இரண்டு நாகரிகங்கள் பற்றிய விவரங்கள் நமக்கு அதிக அளவு கிடைக்கவில்லை.

Mayan
Mayan

இதனை அடுத்து இந்த இரண்டு நாகரீகமும், தமிழர்களின் நாகரிகத்தோடு தொடர்பு உடையதாக இருக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆரம்ப நாட்களில் இந்த மாயன் நாகரீகம் பற்றிய விரிவான ஆய்வுகளை டி.கோ.டி லிண்டா (DIE GO DE LANDA) என்ற கிறிஸ்துவ பாதிரியார் 1870 இல் மாயன் நாகரீகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

மேலும் இவரைப் போலவே டேவிட் ஹோடெல், எரிக் தாம்சன், ஹோவார்ட் லாபே, ஆல்பர்ட் வாஸ்க் போன்றவர்கள் மாயன் நாகரீகம் பற்றி விரிவான அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.இதனை அடுத்து அந்த நாகரீகம் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வைத்தது.

 

மேலும் அமெரிக்க பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், கார்னிஜி நிறுவனம் இணைந்து மாயன்கள் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

 

இந்த சூழ்நிலையில் தான் மாய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரீகத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது என்ற உண்மை இதுவரை வெளிவரவில்லை என்றாலும் அதில் இப்படிப்பட்ட உண்மை உள்ளது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Mayan
Mayan

உண்மையில் இந்த மாயன் இனத்தவர்கள், தமிழர்கள் தான் என்று சில வரலாற்று பேராசிரியர்கள் அடித்துக் கூறி வருகிறார்கள் அதுவும் இந்த இனத்தவர்கள் சேர நாட்டைச் சேர்ந்த தமிழர்களாக இருக்கலாம் என்ற கருத்தை இவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

 

இதனை அடுத்து மெக்ஸிகோ நாட்டிற்கு முதல் முதலாக சென்றவர்கள் மங்கோலியர்கள் தான் என்ற கூற்று தவறானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் மாயன் இனத்தவர்களின் உருவ அமைப்பை மங்கோலியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது உண்மை நிலை நமக்கு புரிய வரும்.

 

மங்கோலியர்களுக்கு தட்டையான மூக்கும், குள்ளமான உருவமும் கொண்டவர்கள். ஆனால் இந்த மாயன்கள் நடுத்தர உருவமும், அகலமான நெற்றியும், எடுப்பான மூக்கும் கொண்டவர்கள். எனவே தான் மாயன் இனத்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து மெக்சிகோ சென்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவரது உடல் அமைப்பை வைத்து கூறுகிறார்கள்.

 

இது மட்டுமல்லாமல் அடிப்படையில் சில ஒற்றுமைகள் காணப்படுகிறது அவற்றைப் பற்றியும் விரிவாக நாம் படித்தால் நிச்சயம் நாம் சொல்லக்கூடிய அந்த விஷயம் அதாவது மாயன்கள் தமிழர்களாக இருக்கலாமா? என்ற கூற்றானது உண்மையாக இருக்கும் என்ற எண்ணத்தை உங்களுள் ஏற்படுத்தும்.

 

மெக்சிகோ நாட்டில் பல பிரிவு மக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் மன்னர் ஆட்சி தான் இருந்து வந்தது. இவர்களும் சேர, சோழ, பாண்டியர்களைப் போல ஒற்றுமையுடன் இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்குள் போரிட்டு வந்திருக்கிறார்கள்.

Mayan
Mayan

மேலும் சோழர்கள் எப்படி சூரிய குலத்தில்  பிறந்தவர்கள் என்று தங்களை பிரகடனப் படுத்திக் கொண்டார்களோ, அதுபோலவே மாயன் நாட்டு மன்னர்களும் சூரிய குலத்தில் தோன்றியவர்களாக கூறி வந்திருக்கிறார்கள்.

 

அதுமட்டுமா இவர்கள் வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் தமிழ் மக்களைப் போலவே இருந்துள்ளது. மேலும் இன்று காட்டில் வசிக்கும் மாயங்களும் நம் தமிழ் பண்பாட்டையும், மரபையும் தான் பின்பற்றி வாழ்கிறார்கள் கூறலாம்.

 

அப்படிப்பட்ட இந்த மாயன் இனத்தை 16 ஆம் நூற்றாண்டில் மெக்சிகோ மீது படையெடுத்து வென்ற ஸ்பெயின் நாட்டினர், அந்த இனத்தை அடிமையாக்கி அவர்களின் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார்கள். இந்த சூழ்நிலையில் மாயன் மக்களை படுகொலை செய்து நெருப்பில் கொன்று அளித்தார்கள்.

 

இதனை அடுத்து ஏறத்தாழ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாயன் இனத்து மக்கள் அங்கிருக்கும் காடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். வாள் முனையில் அன்று நடந்த மதமாற்றத்தை அடுத்து, மதம் மாறாத மாயன் இனத்தவர்கள் இன்றும் காடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

 

அத்தகைய மாயன் இனத்தை சேர்ந்த மக்கள் சிவனையும், சூரியனையும், பாம்பையும், பஞ்சபூதங்களையும் வழிபடுகிறார்கள். இவர்களது முக்கிய உணவே நாம் உண்ணக்கூடிய அரிசி தான் என்பதை பார்க்கும்போது நமக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

Mayan
Mayan

காடுகளில் விளையும் கிழங்குகளை உண்பதோடு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை அவர்கள் புசித்து உண்கிறார்கள். பருத்தி பயிரிட்டு நூலாக நெய்து ஆடையாக உடுத்திக் கொள்கிறார்கள்.

 

நாம் வணங்கும் சூரிய பகவானை இவர்கள் கினிச்சான் (KINICHAN) என்றும் பாம்பை இத்சமா (ITZAMMA) அழைக்கிறார்கள். மேலும் மனிதர்களின் உயிரை எடுக்கும் எமனை அன்புச் (ANBUCH) என்றழைத்து வழிபட்டு வருகிறார்கள். இது உங்களுக்கு கட்டாயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எத்தகைய ஒற்றுமையை மாயன் இனம், தமிழ் இனத்தோடு கொண்டிருக்கிறது என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 

தமிழர்கள் நடுகல் வழிபாட்டை எப்படி செய்வார்களோ, அதுபோலவே மாயம் இனத்தவரிடமும் நடுகல் வழிபாடும், தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் பழக்கமும் இருந்துள்ளது. தமிழர்களைப் போலவே இவர்கள் வானிகளிலும், கட்டிடக்கலையிலும் வல்லவர்களாக விளங்கி இருக்கிறார்கள்.

 

இந்த சூழ்நிலையில் சர் ஜான் ஈவான்ஸ், சர் வால்டர் ராலே மற்றும் மாகாலீன் போன்ற பேரறிஞர்கள் இந்து மகா கடலின் அடிகள் தான் மனித இனம் தோன்றியது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் இந்த பூமியில் முதல் முதலில் மனித இனம் தோன்றிய பகுதி குமரிக்கண்டமாகத்தான் இருக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் உலகிலேயே மிக பழமையான நாகரீகமாக தமிழர் நாகரீகம் இருந்திருக்கலாம். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கின்ற தன்மை நம் தமிழ் மொழிக்கு உள்ளது என்று பல அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் மொழியியல் அறிஞர் டாக்டர் ஏ சந்திரசேகரனின் கூற்றுப்படி உலக மொழிக்கு மூலமாக தமிழ் இருந்துள்ளது. இதன் மூலம் தமிழரது நாகரீகம் உலகமெங்கும் பரவியது என கூறலாம்.

Mayan
Mayan

மேலும் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளை ஆய்வு செய்து உற்று நோக்கும் போது உலக மகா சிற்பியான மாமுனி மாயன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 

அது மட்டுமல்லாமல் இந்த மயன் பரம்பரையில் வந்தவர்கள் தான் தமிழகத்தில் சிற்பிகளாக திகழ்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்களை “மயன் விதித்துக் கொடுத்த மரபினர்” என்று சிலப்பதிகாரம் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளது.

 

இதனை அடுத்து தான் இந்த மயன் மரபானது உலகெங்கிலும் பரவி இருக்கும் குறிப்பாக மெக்சிகோவில் இருக்கும் மாயன்கள், மயன் மரபின் வழிவந்தவர்களாகவே இருக்கலாம். நம்முடைய மயன் நாகரீகம் தான் மெக்சிகோவில் மாயன் நாகரீகமாக வளர்ந்து இருக்கும்.

 

பண்டைய சேர நாடான இன்றைய கேரளாவில் கூட இந்த மயன் மரபின் தாக்கம் அதிகம் உள்ளது. கேரள மாநிலத்தில் வர வேலையை செய்யக்கூடிய சிற்பிகளை தச்சர்கள் என்று அழைப்பார்கள். மேலும் இவர்களை மாயாச்சாரிகள் என்று கூப்பிடுவது தான் வழக்கம் தமிழகத்தை பொறுத்தவரை இவர்களை ஸ்தபதி என்று அழைப்பார்கள்.

 

இதனை எடுத்து தமிழகத்தில் கிடைத்துள்ள பல பண்டைய கால கல்வெட்டுகளில் பெரும் தச்சன் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய தலைமை சிற்பியை ராஜராஜ சோழன் பெரும் தச்சன் என்ற பெயரில் தான் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அந்த வகையில் மாயங்கள் நம் வம்சாவளிகள் என்பது இதன் மூலம் புரிந்து இருக்கும். மேலும் பண்டைய காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த இந்த பூமி கண்ட பிளவுப் கோட்பாட்டின்படி பல கண்டங்களாக பிரிந்தது அனைவரும் அறிந்ததே.

 

இதன் அடிப்படையில் அமெரிக்க நாட்டு மாயன், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டு பழங்குடி மக்கள் அனைவருமே நம் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சார தொடர்பினைக் கொண்டிருப்பதை காண முடிகிறது என்று ஆய்வாளர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

 

இதனை அடுத்து மெக்சிகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் முதன்முதலில் மெக்சிகோவுக்கு வருகை தந்தவர்கள் மங்கோலியர்கள் என்ற செவி வழி கூற்றுதான் வைக்கப்பட்டுள்ளது தவிர அதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

நாம் துணிந்து குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயனின் வழிவந்தவர்கள் தான் இந்த மாயன்கள் என்று கூறலாம். மேலும் கேரளா நாட்டிற்கு மயன் ஆண்டு வந்த மயநாடு உள்ளது. அதுபோலவே குமரிக்கண்டத்தில் மகன் வாழ்ந்த மயன் பறம்பு என்ற பகுதி உள்ளது.

 

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மகன் நாகரீகம் தான் மெக்சிகோவில் மாயன் நாகரீகமாக திகழ்ந்துள்ளது என்றும் இங்கு மயன் வடித்த தாமரை பீடம் தான் மெக்சிகோவில் இருக்கின்ற மாயனின் பிரமிடாக காட்சியளிக்கிறது என்று கூறலாம்.

Mayan
Mayan

மயன் வழிபட்ட பஞ்ச பூத வழிபாடுதான் மெக்சிகோவில் ஐந்து வாயில்களை கொண்ட கல் மண்டபமாக எழுந்துள்ளது என்றும் அங்கு தமிழர்களைப் போலவே சிவ வழிபாடும், நாக வழிபாடும் சிறப்பாக திகழ்ந்துள்ளதாகவும் அதற்கான சான்றுகளும் மெக்சிகோ காடுகளிலும் அருங்காட்சியகத்திலும் உள்ளது.

 

மேலும் மயன் பாதாளம் சென்ற தகவல் நம் நாட்டில் மட்டுமல்லாமல் மெக்சிகோவிலும்  காணலாம். அதுபோலவே மகாபலி சக்கரவர்த்தி வாமனனுக்கு தானம் செய்த காட்சியை மெக்சிகோவில் ஓவியமாக தீட்டு இருக்கிறார்கள் என்பதை சமன்லால் எழுதிய கலாச்சார தொட்டில் இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 

இன்னும் சொல்லப்போனால் மாயன் உருவாக்கிய வட்ட வடிவ காலண்டரின் நடுவே ஓம் என்ற தமிழ் மந்திரம் அப்படியே இடம்பெற்றுள்ளது. இது மயன் எழுதிய பிரணவ வேதத்திற்கு ஒப்பாகும். இதன் மூலம் மாய நாகரிகம் தமிழ்நாட்டின் மயன் நாகரிகத்தின் மறு வடிவம் தான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

 

இப்போது சொல்லுங்கள். உங்கள் மனதில் எத்தகைய எண்ணம் ஓடுகிறது. மாயன்கள் என்பவர்களுக்கும் தமிழ் மரபுக்கும் இடையே உள்ள தொடர்பு உண்மையாக இருக்குமா? உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள தயக்கம் வேண்டாம்.