• October 6, 2024

உலகத்தை வெல்லத் திட்டமா? அதற்கு முன் உன்னை வெல்.. – புத்தரின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..

 உலகத்தை வெல்லத் திட்டமா? அதற்கு முன் உன்னை வெல்.. – புத்தரின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..

buddha

இந்த உலகில் அரசராகப் பிறந்து பின்பு எல்லாம் மாயை என்பதை உணர்ந்து கொண்ட புத்தர் துறவறம் பூண்டு புத்த மதத்தை தோற்றுவித்தார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

 

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கக் கூடிய வேளையிலே, மன அமைதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். அப்படி மன அமைதி இல்லாமல் தவிர்த்து வருபவர்கள் தியானம் செய்வதன் மூலம் மன அமைதியை பெறலாம்.

 

உங்கள் வாழ்க்கையில் எதற்காகவும் நீங்கள் அவசரப்படக்கூடாது. நேரம் வரும் போது அது தானாகவே நடக்கும் என புத்தர் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அதிகமாக பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞன் ஆகிவிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி கூறி இருக்கிறார்.

buddha
buddha

எனவே அளவாக பேசி அதிகமாக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு எதுவும் இல்லை.

 

மகிழ்ச்சியாக நீங்கள் இருக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் தான் உள்ளது. ஒன்று சூழ்நிலையை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மனநிலையை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோல நீங்கள் செய்வதின் மூலம் நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று புத்தர் கூறியிருக்கிறார்.

 

ஆசையை அறவே  விடுத்த புத்தர் இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசை என்று தான் கூறியிருக்கிறார். அதுபோலவே உலகில் நிலையாக இருக்கக் கூடிய ஒரே சக்தி உண்மை, அந்த உண்மையை எப்போதும் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம் என்று கூறி இருக்கிறார்.

buddha
buddha

இன்று நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்த நிலைமைக்கு காரணம் உங்களது எண்ணங்கள் தான். எனவே நல்ல எண்ணங்களை நீங்கள் கொண்டு இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் அற்புதமான இடத்திற்கு செல்வீர்கள். எண்ணங்களை உங்களது சொந்த விதியை மாற்றி அமைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

நீங்கள் தவறான பாதையில் வேகமாக செல்வதை விட சரியான பாதையில் மெதுவாக சென்றாலும் சிறப்பாக இருக்கும் என்று புத்தர் கூறி இருக்கிறார். அவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது மிக எளிது. ஆனால் நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

buddha
buddha

வெளி தோற்றத்தை பற்றி எப்போதும் நீங்கள் கவலை கொள்ளாமல் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள என்ன வழி என்பதை பார்த்து அதை செய்ய வேண்டும். ஒரு மனிதன் தீய செயல்களை செய்வது எளிமையாக இருக்கும். ஆனால் அதுவே நல்ல செயல்களை செய்வது கடினமானது. எனவே நம்பிக்கையோடு நல்லதை மட்டும் தேர்ந்தெடுக்கக்கூடிய தன்மை உங்களிடம் இருந்தால் நீங்கள் எளிதில் நேர்மையான முறையில் வெற்றி இலக்குகளை அடைய முடியும்.

 

எனவே புத்தர் கூறிய இந்த சிந்தனைகளை நீங்கள் உறங்கும் வேளையில் ஒரு முறை படித்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு புது உத்வேகம் திறக்கும் கட்டாயம் நீங்கள் நல்ல பாதையில் நடையிடுவீர்கள் இதன் மூலம் பல நன்மைகள் உங்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் வந்து சேரும்.