• October 7, 2024

“பாம்பு புற்றுக்கு பால், முட்டை எதற்கு..மர்மமான விளக்கங்கள்..!” – இதற்குத்தான் இப்படி செய்தோமா?

 “பாம்பு புற்றுக்கு  பால், முட்டை எதற்கு..மர்மமான விளக்கங்கள்..!” – இதற்குத்தான் இப்படி செய்தோமா?

snake

பாம்புகள் என்றாலே படை நடுங்கும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றது போலவே சுமார் 3500 க்கும் மேற்பட்ட இனங்கள் பாம்பில் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட இனத்தில் இருக்கக்கூடிய பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கும் மீதி இருக்கக்கூடிய இடங்களில் இந்த விஷத்தன்மை 25 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்.

 

எனவே மனித இனத்தை பொறுத்தவரை பாம்புகளால் ஆபத்து மற்றும் உயிர் பிரிதல் போன்றவை  200 இனங்களில் இருக்கின்ற பாம்புகள் கடிப்பதன் மூலமே நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி பாம்புகள் தினமாக கொண்டாடப்படுவது பலருக்கும் தெரியாது. இந்த தினத்தில் பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை உண்டாக்கவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

snake
snake

மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே புராணக் கதைகளில் கூட இந்த பாம்புகளுக்கு தனித்துவமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்து மதம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருக்கின்ற மதங்களில் இந்த பாம்புகளுக்கு என்று சிறப்பு இடம் தரப்பட்டுள்ளது.

 

குறிப்பாக நாம் இருக்கின்ற பகுதிகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுரட்டை பாம்பு, பச்சை பாம்பு போன்ற இன பாம்புகளை மட்டும் தான் நாம் பார்க்கும் இருப்போம். சில நேரம் அவற்றை பார்த்தாலே கொன்று விடுவோம்.

 

பாம்புகளுக்கு என்று விசேஷ பூஜைகளை என்றும் கோயில்களில் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள், புற்று உள்ள கோயிலுக்கு சென்று அங்கு பாலும், முட்டையும் நாகருக்கு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

snake
snake

இப்படி புற்றுள்ள பகுதியில் இந்த பாலும், முட்டையும் வைப்பதின் காரணம் என்ன? எதற்காக தொன்று தொட்டு இப்படி செய்து வருகிறார்கள். இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பதை உங்களுக்கு தெரியுமா?

நாக தோஷம் என்பது உண்மையில் உள்ளதா? அல்லது கட்டுக்கதையா? இது போன்ற பல கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கை தான். எனினும் ஜோதிடக்கலையே ஒரு அறிவியல் நிமித்தமான ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோள்களின் சஞ்சாரத்தை பொறுத்து, நாம் பிறக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகம் ,கோள்களின் ஆதிக்கம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டி படைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

 

எனவே அறிவியல் ரீதியாக ஜோதிடத்தை ஆராய்ந்து பார்க்கும் போது கோள்களின் தன்மையை பொறுத்து அவனது மனநிலை அமைவது இயற்கையான ஒன்றுதான். அவன் மன நிலையை மேம்படுத்துவதற்காகத்தான் பரிகாரங்கள் மட்டுமல்லாமல் வேறு சில செயல்களும் செய்யப்படுகிறது.

snake
snake

ஆனால் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது என்பது நாக தோஷத்திற்கான பரிகாரம் அல்ல. பால் மற்றும் முட்டை இவை இரண்டும் கலந்து அந்த  இடத்தில் வைக்கும் போது பாம்புகளின் இன விருத்தி தடைப்படும் என்பதுதான் உண்மையான கூற்றாகும்.

 

இதற்குத்தான் புற்று எந்தப் பகுதியில் இருந்தாலும், அங்கு பால் மற்றும் முட்டை ஊற்றப்படுகிறது. இதன் மூலம் பாம்புகளின் உடலில் உற்பத்தியாகும் இனப்பெருக்க ஹார்மோன் வாசத்தை நுகர முடியாத காரணத்தால் பெண் பாம்புகள்  இனவிருத்தி செய்வது தடையாகும் என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள், இத்தகைய சடங்கை கொண்டு வந்திருக்கலாம்.

 


1 Comment

  • அருமையான விளக்கம். படிக்க படிக்க இன்னும் படிக்க தூண்டுகிறது. நன்றி ❤️

Comments are closed.