காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு ஏன் கிடைத்தது?

இது இன்ஸ்டாகிராம் பதிவுக்காக வேடிக்கையாக செய்யப்பட்ட பொய்யான “ஐஜி நோபல் பரிசு” ஆராய்ச்சி. உண்மை நோபல் பரிசு கிடையாது. வன விலங்குகளை அப்படி தலைகீழாக தொங்க விட்டால் அதன் உடலில் ஏதாவது மாற்றம், தாக்குதல் உண்டாகுமா என்பதைக் கண்டறிய அந்த ஆராய்ச்சி.
அதுபோல நாமிபியாவில் காண்டா மிருகங்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு எடுத்துச் சென்றால் என்ன விளைவுகள் உண்டாகும் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சியை செய்து பார்த்துள்ளனர்.
12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர் ராபின் ரேட்கிளிஃப்.
ஆப்பிரிக்காவில் காண்டா மிருகங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றும் பொருட்டு அவற்றை ஹெலிகாப்டரில் தலைகீழாகத் தொங்கிவிட்டு எடுத்துச் செல்வது வழக்கம்.
ஹெலிகாப்டருக்கு அடியில் காண்டாமிருகங்களைத் தலைகீழாக தொங்கவிட்டால் அவற்றின் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை சோதிப்பதற்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் இப்படி தலைகீழாக தொங்கவிட்டு கொண்டு செல்லும்போது அவற்றின் நுரையீரல் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிவதுதான் இச்சோதனையின் உட்கரு.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
அதன்படி முதலில் காண்டாமிருகங்களை ஒரு பக்கமாக படுக்க வைத்து தூக்கி சென்றனர். இது சற்று கடினமாக இருந்ததுபோல் உணர்ந்துள்ளனர். அதனால் காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு கொண்டு செல்வது என்று முடிவு செய்து அதை சோதித்துப் பார்த்தனர். அப்படி முயற்சித்தபோது அவற்றுக்கு சற்று வசதியாக இருந்திருக்கும் போல. அதனால் தலைகீழாகவே தொங்கவிட்டு கொண்டு சென்றனர்.