• July 27, 2024

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 105 வயது வீராங்கனை !!!

 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 105 வயது வீராங்கனை !!!

அமெரிக்கா நாட்டின் லூடியானாவில் நடத்தப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 105 வயது வீராங்கனை பங்கேற்று சாதனை புரிந்துள்ளார். இவர் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில துடுக்கான இளைஞர்களே விளையாட்டு என்றால் சற்று தூரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஜூலியாவின் இந்த உலக சாதனை அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜூலியா 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் இரண்டு வினாடிகளில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

105-year-old Louisiana woman becomes first her age to run 100 meters | Fox  News

அந்த நாட்டின் முதியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் மகளிர் வீராங்கனையும் ஜூலியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து ஜூலியா கூறுகையில், “என்னுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்திற்குள் கடந்துவிட நான் முயற்சி செய்தேன்.” என கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு புதிய மெக்சிகோவில் நடத்தப்பட்ட முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜூலியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலியா ஹாக்கின்ஸ்-ன் இந்த சாதனைக்கு உலகெங்கிலுமுள்ள நெட்டிசன்கள் தங்களது பாராட்டு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஜூலியா ஹாக்கின்ஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 105 வயது ஜூலியாவின் வீடியோவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களை deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.