30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மகளிர் இட ஒதுக்க மசோதா..! – விரிவான அலசல்..
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவீத இட ஒதுப்பை அளிக்கக்கூடிய மசோதாவானது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இழுபரியில் உள்ள நிலையில் தற்போது நிறைவேற கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதுவும் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா சட்டமாக கூடிய பட்சத்தில் 2029 இல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 1989 இல் தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் உள்ளது. எனினும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் மகளிர் காண 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்ய சபாவில் தோல்வியடைந்தது.
மேலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் இட ஒதுக்கீடு மசோதா 1993 2 சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானது அனைவருக்கும் தெரியும்.
இதனைத் தொடர்ந்து லோக்சபா மற்றும் மாநில சபைகளுக்கான மகளிர் இட ஒதுக்கீடு 33 சதவீதம் அளிக்கக்கூடிய மசோதா 1996 இல் பலமுறை தாக்கல் செய்யப்பட்டும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது லோக்சபாவில் நிறைவேறவில்லை.
அப்போது லோக்சபாவில் 15 சதவீதம் மட்டும் பெண்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 128 வது திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் இந்த மசோதாவிற்கு பெண் சக்தியை வழங்கும் சட்டம், நாரி சக்தி வந்தன் அதீனியம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லோக்சபாவில் தற்போது 81 பின் எம்பிக்கள் உள்ளார்கள். மகளிர் இட ஒதுக்கீடு அளிக்கும் பட்சத்தில் மேலும் பெண்களின் எண்ணிக்கை அதாவது 181 என உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
1998 வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட மசோதா அறிமுகமாகி நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து 1999, 2002, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது. விரைவில் இதற்கான பதில் கிட்டும் என்ற நம்பிக்கையில் மகளிர் மட்டுமல்லாமல் அனைவரும் காத்திருக்கிறார்கள்.