• July 27, 2024

காஞ்சிபுரமா? பனாரஸ்ஸா? எப்படி புடவை வித்தியாசத்தை கண்டுபிடிக்க..

 காஞ்சிபுரமா? பனாரஸ்ஸா? எப்படி புடவை வித்தியாசத்தை கண்டுபிடிக்க..

silk

அடுத்த ஆத்து அம்புஜத்தை பார்த்தேளா.. அவள் ஆத்துக்காரர் வாங்கித்தந்த பட்டு புடவை பற்றி கேட்டேளா.. என்ற பாடல் வரிகள் பெண்களின் பட்டுப் புடவை மோகத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இன்று எவ்வளவுதான் உச்சகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் இருந்தாலும் பட்டுப் புடவையை விரும்பாத பெண்களை இல்லை எனக் கூறலாம்.

பாரம்பரியமாக இந்த பட்டுப்புடவை பல விதமான நிகழ்வுகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அப்படிப்பட்ட பட்டுப் புடவையில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு என்ற இரண்டு பட்டுக்களுக்கும் ஒரு முக்கிய இடம் உள்ளது.

silk
silk

இந்த இரண்டுமே பட்டுப் புடவையை உற்பத்தி செய்து தந்தாலும் அவற்றிக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது, எப்படி காஞ்சிபுர பட்டையும் பனாரஸ் பட்டையும் நாம் பிரித்தறிய முடியும் என்பதை பற்றி எந்த கட்டுரையில் காணலாம்.

இரண்டு ஊர்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பட்டுப் புடவைகளில் எடையை தொடங்கி, நெசவு செய்யும் இடம் வரை பல்வேறு வகையான வேறுபாடுகள் காணப்படுகிறது.

பனாரஸ் பட்டுப் புடவையை பொறுத்தவரை இதன் பூர்வீகம் முகலாய ஆட்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும். பனாரஸ் நெசவு செய்யப்படும் புடவைகளில் முகலாய காலத்தின் சாயல்களை உங்களால் காண முடியும். நெசவாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பட்டு நூல்களை பயன்படுத்தி மலர்கள் அல்லது வேறு சில டிசைன்களை இந்தப் புடவைகளில் செய்கிறார்கள் இவற்றை கல்கா அல்லது பெல் என்று அழைக்கிறார்கள்.

silk
silk

இந்தப் பட்டுப்புடவைகளை தயாரிக்க 15 நாட்களில் இருந்து ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறார்கள். இது அந்தப் புடவையின் டிசைனை பொறுத்தது என்று நாம் கூறலாம்.

அதுவே தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படும் புடவைகளில் அதன் வேலைப்பாடுகள் மாறுபட்டு உள்ளது. இந்த புடவைகளில் தங்க ஜரிகைகளை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம்,காஞ்சிவரம்,காஞ்சி பட்டு போன்ற புடவைகள் அனைத்தும் ஒரே வகையில் இருந்தாலும் சிறு, சிறு மாறுபாடுகள் அவற்றுக்கு இடையே காணப்படுகிறது. 

காஞ்சிவரம் பட்டு ஆனது தூய மதனி பட்டு இழைகளால் செய்யப்படுகிறது. இவை இந்திய மணப்பெண்களிடையே பிரபலமான புடவையாக வலம் வருகிறது. இது தென்னிந்திய பட்டுப்புடவை ஆகும். இதில் புடவையையும் முந்தானையையும் இணைத்து செய்கிறார்கள் இதனை பிண்டி என்று அழைக்கிறார்கள்.

silk
silk

விலையை பொறுத்த வரை 2000 ரூபாய் முதல் 50000 வரை  காஞ்சிபுரம் பட்டுப் புடவை கிடைக்கும். மேலும் அதிகமான விலையில் தேவை எனில் நெய்து தருவார்கள். அது போலவே பனாரஸ் சேலையின் விலை 2000 முதல் 70000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அடர் சிவப்பு நிறங்களில் மட்டுமல்லாமல் வெளி மஞ்சள் நிறத்திலும் பனாரஸ் பட்டுப் புடவைகள் கிடைக்கும். அதேபோல காஞ்சிபுரம் புடவைகளில் சாம்பல், பழுப்பு போன்ற மென்மையான வண்ணங்களில் நமக்கு கிடைக்கிறது.