• July 27, 2024

“ஸ்டெம் செல் கொண்டு செயற்கை மனிதக்கரு..!” – இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை..

 “ஸ்டெம் செல் கொண்டு செயற்கை மனிதக்கரு..!” – இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை..

Artificial human embryo

பொதுவாகவே ஒரு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு விந்தணு, முட்டை மற்றும் கருப்பை தேவை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

ஆனால் இவை ஏதும் இல்லாமல் செயற்கை முறையில் அதுவும் மனிதக்கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள். இந்த விஞ்ஞானிகள் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்கள்.

மேலும் இந்த செயற்கை கருவானது கர்ப்ப பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான முடிவுகளை வெளியிட்டதோடு அந்த சமயத்தில் தோன்றக்கூடிய ஹார்மோன்களின் தன்மையை கொண்டுள்ளது.

Artificial human embryo
Artificial human embryo

மனித கரு பற்றிய ஆராய்ச்சி சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மிகவும் சிக்கலான ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். எனினும் இயற்கையான மனிதக் கருவின் மாதிரியை பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மருத்துவத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் தான் ஸ்டெம் செல்சை பயன்படுத்தி நேச்சர் ஆய்விதலில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரையில் ஆரம்பகால மனிதக் கருவில் இருக்கும் முக்கிய கட்டமைப்புகளை பிரதிபலிக்க கூடிய வகையில் ஒரு முழுமையான கருமாதிரியை இஸ்ரேலிய ஆராய்ச்சி குழு உருவாக்கி உள்ளது.

இந்தக் கருவில் இவர்கள் விந்தணு மற்றும் கருமுட்டைக்கு பதிலாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஸ்டெம் செல்கள் உடலில் உள்ள எந்த வகையான  திசுக்களாகவும் மாறும் திறனை கொண்டிருக்கும் வகையில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.

Artificial human embryo
Artificial human embryo

இதனை அடுத்து ரசாயனங்களின் மூலம் இந்த ஸ்டெம் செல்களை மனிதக் கருவின் ஆரம்ப கட்டங்களில் காணப்படும். இதனை நான்கு வகையான உயிரணுக்களாக உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

இவை முறையே எடிபிலாஸ்ட் செல்கள் (Epiblast cells) இந்த செல்கள்தான் கருவாக மாறும் தன்மை கொண்டது. இதனை அடுத்து ட்ரோபோ பிளாஸ்ட் செல்கள் (Trophoblast cells) இது கருவில் நஞ்சு கொடியாக மாறும் தன்மை கொண்டது. மூன்றாவதாக ஹைபோபிளாஸ்ட் செல்கள் (Hypoblast cells) இது மஞ்சள் கருப்பையாக மாறும் இறுதியாக எக்ஸ்ட்ரா எம்பிரயோனிக் மீசோடெர்ம் செல்கள் இவற்றில் 120 செல்கள் மொத்தமாக இருக்கும்.

 இது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த பிறகு விஞ்ஞானிகள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிந்தார்கள்.

Artificial human embryo
Artificial human embryo

இதனை அடுத்து இந்த கலவை சுமார் ஒரு சதவீதம் மனிதக் கருவை ஒத்த ஒன்று தன்னிச்சையாக வளர தொடங்கியுள்ளது. இந்த கலவையை சுமார் 14 நாட்கள் ஆய்வகத்தில் அப்படியே வளர அனுமதித்தபோது மனித கருவோடு ஒப்பிடும் அளவு இந்த கரு மாதிரிகள் வளர்ந்துள்ளது.

சட்ட ரீதியாக 14 நாட்களுக்கு மேல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனிதக்கருவை அதற்கு மேல் வளர விட முடியாத சூழ்நிலையில் கருவின் 3டி மாதிரிகள், நஞ்சு கொடியாக மாறும் ட்ரோபோ பிளாஸ்ட் கருவை சூழ்ந்திருந்தது. மேலும் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களை தரும் லாகுனா எனப்படும் குழிகள் இதில் காணப்பட்டது.

14 நாட்கள் தாண்டி ஒரு கருவை ஆய்வகத்தில் வளர்ப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் நடக்காத செயல் என்று கூறலாம். இது மாதிரியான செயற்கை கரு மாதிரிகளை பயன்படுத்தி கர்ப்பம் அடைவதும் சட்டவிரோதமானது.