• September 8, 2024

“உங்க பிள்ளைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகள்..!” – இனிமேலாவது இத ஃபாலோ பண்ணுங்க..

 “உங்க பிள்ளைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகள்..!” – இனிமேலாவது இத ஃபாலோ பண்ணுங்க..

children

உங்கள் வீட்டில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இருக்கிறார்களா? அப்போது நீங்கள் கட்டாயம் எந்த கட்டுரையை படித்து, இதை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் பிள்ளைகளின் குண நலன்கள் மேம்படுவதோடு பலர் மத்தியில் பாராட்டையும் பெறுவார்கள்.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை ஃபாலோ செய்து நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ந்தாலே போதும். அவர்கள் மாஸாக சூப்பராக உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள்.

பொதுவாகவே குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பார்கள். உங்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் சின்ன, சின்ன விஷயங்களை கிரகித்து அவற்றை கற்றுக் கொள்ள தவற மாட்டார்கள்.

children
children

எனவே அவர்கள் கவனித்த செயல்களை தான் நாளாவட்டத்தில் பின்பற்ற துவங்குவார்கள். இந்த செயலுக்காக தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் வீட்டில் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை மிக கவனமாக வெளிப்படுத்து வேண்டும். அதுவும் குறிப்பாக உங்கள் குழந்தைகள் முன் எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது.

மேலும் ஆபாச வார்த்தைகள், தீய வார்த்தைகளை நீங்கள் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. ஏனெனில் கெட்ட வார்த்தைகள் என்பது எல்லாம் அந்த குழந்தைகள் கேட்ட வார்த்தைகள் தான் கெட்ட வார்த்தையாக மருவியுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அது போன்ற அவற்றை உங்கள் வீடுகளில் பேச மாட்டீர்கள்.

உடனடியாக நீ உன் ஹோம் ஓர்க்கை முடித்து விடு இவ்வளவு நேரம் தூங்குவதா? இப்படி உட்காராதே.. சாப்பிட இது சரியான நேரமா? இவ்வளவு சாப்பிடாதே என தொட்ட 90க்கு எல்லாம் நீங்கள் அவர்களை கட்டுப்படுத்தி அடிக்கடி கூறும் எதிர்மறை வார்த்தைகள் அவர்களை கண்டிப்பாக பாதிக்கும்.

children
children

 நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை நெகட்டிவ்வாக அவர்களது சிந்தனையில் கலந்து விடும். எனவே எப்போதும் நேர்மறையான வார்த்தைகளை பேச முயற்சி செய்யுங்கள்.

உங்கள் அணுகுமுறையை மாற்றி அமையுங்கள். அவர்களுக்கும் மரியாதை கொடுங்கள். விளையாட வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் விளையாட வாய்ப்பு கொடுங்கள். கட்டளையிட்டு உங்கள் குழந்தைகளை நீங்கள் நடத்த வேண்டாம். கனிவோடு நடத்தினாலே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இன்றைக்கு நீங்கள் கேம் விளையாடல்வது போதும். நன்றாக உட்காருங்கள், அதைத் தொடுவது நன்றாக இருக்காது. நிறைய சாப்பிடுகிறீர்கள், இனிப்பு சாப்பிடுவதின் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது போல கனிவாக சொல்லும் போது அவர்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படும்.

குழந்தைகளின் நம்பிக்கையை பாதிக்க கூடிய சொற்களை ஒரு போதும் சொல்லாதீர்கள். மேலும் சாபம் விடக்கூடிய வார்த்தைகளை அவர்கள் மீது வீசாதீர்கள் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.

தோல்வி ஏற்படும் போது ஊக்குவித்து அரவணைத்துச் செல்லுங்கள். இந்த ஊக்குவிப்பு அவரை சரியான பாதையில் எடுத்துச் செல்வதற்கு உதவும்.

children
children

நல்ல வார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல வகையான நிகழ்வுகள் நடக்கும். நேர்மறையான எண்ணங்கள் வாழ்க்கையை உயர்த்தும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

நல்ல நட்பு வட்டாரம் உருவாக அவர்களை நீங்கள் வழிநடத்துவது மிகவும் சிறந்தது. எதிரிகள் இருக்க மாட்டார்கள். எப்போதும் அன்பு, நேர்மை, பாசம் இவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேற்கூறிய கருத்துக்களை வலியுறுத்தி நீங்கள் உங்கள் பிள்ளைகளை பக்குவமாக நடத்த முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக அவர்கள் இடையே ஏற்படும் மாற்றம் உங்களுக்கு மிக நன்றாக தெரியவரும்.

எனவே இந்த வழிமுறையை ஃபாலோ செய்து உங்கள் பிள்ளைகளை வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறந்த பிள்ளைகளாக அறிமுகப்படுத்துங்கள்.