• July 27, 2024

 “செவ்வாய் கிரகத்தை புரட்டிப் போடும் தூசி சூழல்..!” – வீடியோவை அனுப்பிய பெஸ்டி வாரன் ரோவர்..!

  “செவ்வாய் கிரகத்தை புரட்டிப் போடும் தூசி சூழல்..!” – வீடியோவை அனுப்பிய பெஸ்டி வாரன் ரோவர்..!

Mars

நாசா மூலம் விண்வெளிக்கு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட பெர்சிவாரன்ஸ் ரோவர் தற்போது எடுத்து அனுப்பி இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தில் இருக்கிறார்கள்.

இந்த ரோவர் ஆனது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்பட்ட நிகழ்வை தான் படம் பிடித்து தற்போது அனுப்பி உள்ளது.

Mars
Mars

இந்த நிகழ்வை ஒரு டஸ்ட் டெவில் (Dust devil) நிகழ்வு என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வானது ஆகஸ்ட் 30 அன்று தோரோஃபேர் ரிட்ஜ் வழியாக மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து ஒரு மிகப்பெரிய தூசி சூழலை ஏற்படுத்தி உள்ளதை கண்டறிந்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்வு பற்றிய வீடியோவை நாசா வெளியிட்டதோடு செவ்வாய் கிரகத்தில் டஸ்ட் டெவில் நிகழ்வு ஜெஸெரோ பள்ளத்தின் மேற்கு விளிம்பில் நகர்வதை மிகத் தெளிவாக காட்டியுள்ளது. ரோவரின் நவ் கேம்கள் மூலம் நான்கு வினாடிகள் இடைவிடாமல் 21 ப்ரைம்களில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் அந்த தூசிகள் கீழ்ப்பகுதி பள்ளத்தாக்கைக்கு மேற்கு விரும்பும் நகர்வதை தெளிவாக பார்க்கலாம். ரோவரின் நவ் கேம்கள் மூலம் நான்கு வினாடிகள் இடைவிடாமல் எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோ 20 முறை வேகப்படுத்தப்பட்டுள்ளது.

Mars
Mars

இதனை அடுத்து இந்த தூசி புயலானது தரவுகளின் தோரோஃபேர் ரிட்ஜ் என்ற இடத்தில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டு இருக்கிறார்கள். இதன் அகலம் சுமார் 60 மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் 118 மீட்டர் மட்டுமே நம்மால் அதைக் காண முடியும்.

இந்நிலையில் இந்த தூசி புயலின் வீசும் நிழல் சுமார் 2 கிலோ மீட்டர் உயரம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். குளிர்ந்த காற்றின் இறங்கு நெடு வரிசையுடன் சூடான காற்று கலக்கும் போது இது போன்ற தூசி சுழல்கள் உருவாகுவதாக கூறியிருக்கிறார்கள்.

Mars
Mars

மேலும் செவ்வாய் கிரகத்தின் வசந்தம் மற்றும் கோடை மாதங்களில் இவை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாகவும், ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தின் வட அறைக்கோளத்தில் அமைந்துள்ளது.எனவே தற்போது அங்கு கோடை காலம் நிலவுகிறது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் இதுபோன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியக்கூடிய பட்சத்தில் அவற்றை எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இது போன்ற செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய தயங்க வேண்டாம்.