உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காப்பி எது தெரியுமா? எதற்காக இந்த விலை? -படிக்கலாம் வாங்க..
உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் காபி பருகுவதை தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி வருகிறார்கள். இந்த காப்பியின் பயன்பாடு நாடு முழுவதும் இடையே உள்ள மக்களிடையே பல்கிப் பெருகி உள்ளது என கூறலாம்.
அந்த வகையில் காபிக்கான விலை எவ்வளவு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பரவலாக ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படக்கூடிய இந்த காபி மிக விலை உயர்ந்த நிலையில் விற்கப்படுகிறது, என்றால் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும்.
அப்படிப்பட்ட காபியை குடிக்கின்ற காபி பிரியர்கள் இந்த காபியின் விலையை கேட்டால் ஆடி விடுவார்கள். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவு இதன் விலை உள்ளது என்பதுதான் அதன் காரணம்.
அப்படி என்ன இந்த காபிக்குள் தனித்துவமாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இந்த காபியின் உற்பத்தி முறைகள், தோற்றம், அதன் சுவை தன்மை ஆகியவற்றுக்குத்தான் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினால் நீங்கள் அசந்து விடுவீர்கள்.
இந்த காபியானது கோபி லூவாக் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு திமோரில் முதன்மை உற்பத்தி பொருள் என்று என கூறலாம்.
மேலும் இந்த காபியானது சிறிய பாலூட்டியான ஆசிய பா சிவெண்டு விலங்கை கொண்டு தயாரிக்கிறார்கள். காபியை தயாரிக்க பயன்படும் பொருளை சாப்பிட வைத்து அவை வெளியேற்றுவதை கொண்டு இந்த காபியை உருவாக்குகிறார்கள்.
எனவேதான் இந்த காப்பியின் விலை 600 டாலர் வரை இருக்கும் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 49 ஆயிரத்து 823 ஆகும்.
இதனை அடுத்ததாக பிளாக் ஐவரி காபி தாய்லாந்தில் தயாரிக்கப்படும் விலை உயர்ந்த காபிகளில் ஒன்று இந்த காபியை அரபிக்கா பீன்ஸ் யானைகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டு பின்னர் பீன்ஸ் அவற்றின் கழிவுகளில் சேகரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான உற்பத்தி செயல்முறை காரணமாக இதன் விலை அதிகரித்து உள்ளது. இதன் விலை சுமார் 500 டாலர்கள் ஆகும் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 41,519 ரூபாய்.
அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருக்கும் விலை உயர்ந்த காபி பாசண்டா சான்டா இன்ஸ். இந்த காஃபியானது பிரேசில் நாட்டில் உள்ள மாண்டி கோரா மலைகளின் அடிவாரத்தில் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் உற்பத்தி 100 ஆண்டுகளுக்கு முந்தையது. இதன் சிறப்பு இந்த காபியில் இருக்கக்கூடிய இனிப்பு சுவைதான்.
எனவேதான் இந்த காபி பானத்தின் சுவையை விரும்பக்கூடிய மக்கள் அனைவரும் இந்த காபியை வாங்கி பருகுகிறார்கள். இதன் விலை 400 கிராம் 3800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செயின்ட் ஹெலினா காபி செயின்ட் ஹெலினா கீப்பிங் பயிரிடப்படுகிறது. இந்த தீவு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவே ஆப்பிரிக்காவின் மேற்கு கரை பகுதியிலிருந்து சுமார் 120 மைல் தொலைவு அமைந்துள்ளது. இந்த காபி கொட்டை நறுமணத்தோடு உள்ளதால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கி குடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே தான் இந்த காபியின் விலை 80 டாலர்கள் வரை உள்ளது இந்திய மதிப்பில் சுமார் 644 ஆகும்.
கடைசியாக நாம் பார்க்க இருப்பது பிளாக் பிளட் ப்ளட் ஆஃப் தி எர்த் இது பாரம்பரிய காபி இல்லை. எனினும் ஒரு ஆடம்பரமான காபியாக மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. எனவே தான் இதன் விலை சராசரியாக சுமார் 50 டாலர்கள் உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 4152 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களை நீங்கள் படித்துப் பார்த்தாலே உங்களுக்கு காபியின் விலை இவ்வளவு என்பது மிக எளிதில் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.