• November 14, 2024

 “உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம்..!” – மொசாட் (Mossad) செய்த சிறப்பு சம்பவம்..

  “உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம்..!” – மொசாட் (Mossad) செய்த சிறப்பு சம்பவம்..

Mossad

திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட்டின் அசாத்திய உளவு திறனையும், அற்புத நகர்வுகளையும் பார்த்து இருக்கக்கூடிய நீங்கள் உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம் செய்த அளப்பரிய சாதனைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அது போல ரா ஏஜெண்டுகள் மற்றும் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து பல படங்களில் நாம் அவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் உளவு நிறுவனங்கள் எப்படிப்பட்ட மிகப்பெரிய சாகசங்களை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

Mossad
Mossad

இந்த உளவு அமைப்பானது வெளிநாடுகளுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் அவர்களது நடவடிக்கைகளை கண்ணும், கண்ணும் வைத்தது போல் முடித்துவிட்டு திரும்பக் கூடிய திறமையும், புத்தி கூர்மை வாய்ந்த அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறந்த உளவு அமைப்பாக இஸ்ரோலின் மொசாத் நிறுவனம் திகழ்கிறது. பல எதிரிகளின் நாடுகளுக்கு அசால்டாக சென்று சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அதனைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலாவதாக நீங்கள் படிக்க இருப்பது ஆபரேஷனல் ஃபினாலே.

Mossad
Mossad

1933 முதல் 1945 வரை நடைபெற்ற இனப்படுகொலையில் நாஜி ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளில் கோடிக்கணக்கான யூதர்கள் கும்பல் கும்பலாக கொலை செய்யப்பட்டார்கள்.

இந்த படுகொலைகளுக்கு காரணமாக கெஸ்டாபோ என்ற ஹிட்லரின் ரகசிய காவல் படையில் தலைவராக  அடால்ஃப் ஜக்மன் நீண்ட காலம் இருந்திருக்கிறார். யூதர்களை அழிக்க இறுதித் தீர்வு என்ற கொடூரமான திட்டம் அவரது காலத்தில் தான் துவங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகும் உயிரோடு இருந்த இந்த நபர் மூன்று முறை பிடிபட்ட நிலையிலும் கைது செய்ய முடியவில்லை. 1957 ஆம் ஆண்டு ஃபிரிட்ஸ் பாயர் என்ற யூத மொசாடுக்கு அடால்ஃப் ஜக்மன் அர்ஜென்டினாவில் வசிப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.

Mossad
Mossad

மேலும் ஜக்மனின் மகன் ஒரு யூத பெண்ணை காதலித்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் வழியாக இந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஆராய்ந்து அதை உறுதிப்படுத்தியது மொசாட்.

இதனை அடுத்து ஐக்மன் உயிரோடு பிடித்து இஸ்ரேலுக்கு அழைத்து வரும் பணியை இந்த உளவு அமைப்பு துவங்கியது. இதற்கு தளபதியாக ரஃபி ஜடனை நியமித்தது.

இவர் தலைமைகளான ஒரு குழு அர்ஜென்டினாவிற்கு சென்று அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது. அதை கோட்டை என்று அழைத்தார்கள். இதன் பிறகு 1960 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் 150ஆவது சுதந்திர தினம் மே 20 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இஸ்ரேலின் கல்வி அமைச்சர், அப்பா எபென் தலைமையில் ஒரு குழு அர்ஜென்டினாவிற்கு சென்றது.

அங்கு இவர்களை அழைத்துச் செல்ல இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விஸ் பிரிங் ஜெயண்ட் என்ற விமானத்தை தயார் செய்தார்கள். அமைச்சருக்கு தெரியாமல் ஐக்மனைக் கடத்தி இந்த விமானத்தில் கொண்டு வருவது தான் இவர்களது திட்டம். எனவே தினமும் ஐக்மன் கண்காணிக்கப்பட்டது பலருக்கும் தெரியாது.

Mossad
Mossad

இவர் தினமும் மாலை ஏழு 40 மணிக்கு பேருந்தில் வீடு திரும்புவதை கண்காணித்து இருந்ததின் காரணமாக மிகச் சாதாரணமான பேருந்து இறங்கி சென்ற ஐக்மனை குறிவைத்து இரண்டு கார்கள் சென்றது. பேருந்தில் இருந்து இறங்கிய உடனே ஜக்மன் பிடிபட்டு ஒரு காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

இதனை அடுத்து மே இருபதாம் தேதி ஒரு இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் பணியாளர் போல் உடை அணிந்து விஸ்பர் ஜெயின்ட்டில் இஸ்ரேல் அழைத்துவரப்பட்ட இவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைத்துவரப்பட்ட செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தொடர்ந்து பல மாதங்கள் ஜக்மன் விசாரிக்கப்பட்டு இறுதியில் 15 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். யூதர்களை கொன்று குவித்த நாசி அதிகாரிக்கு மரண தண்டனை இந்த உளவுத் துறையின் மூலம் வழங்கப்பட்டது.