• July 27, 2024

“முயற்சி செய்து பார் தோழா..!” – உன் முயற்சியை திருவினையாக்கு..

 “முயற்சி செய்து பார் தோழா..!” – உன் முயற்சியை திருவினையாக்கு..

Muyarchi

வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார் தோழா.. கட்டாயம் உன் முயற்சி ஒரு காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிக்கும்.

 

நீங்கள் ஒன்றுக்காக முயற்சி செய்யும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் முயற்சியை கைவிடக்கூடாது. இதைத்தான் திருவள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று தனது குறளில் மிக அழகான முறையில் தெரிவித்திருக்கிறார்.

 

இதன் மூலம் உங்கள் முயற்சி, விடாமுயற்சியாக இருந்தால் எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும், நீங்கள் எளிதாக செய்ய முடியும் என்பதை தான் இந்த குறள் நேர்த்தியான முறையில் கூறுகிறது.

Muyarchi
Muyarchi

உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்து எறிய முயற்சியை மேற்கொள்வதின் மூலம் தான் நீங்கள் வெற்றியாளராக மாறுவீர்கள்.

 

இதைத்தான் கியூபாவின் புரட்சியாளர் சேகுவேரா “விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லை என்றால் உரம்” என்று உறுதி பட கூறி இருக்கிறார்.

 

இது போன்ற நேர்மறையான வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கேட்கும் போது உங்களுக்குள் ஒரு வேகம் ஏற்படும். அந்த வேகத்தில் நீங்கள் குறிப்பிட்ட முயற்சிகள் இறங்கினால் நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.

 

உங்கள் லட்சியங்களை நீங்கள் அடைய விடாமுயற்சி, கடின உழைப்பு, மன தைரியம் இவை கட்டாயம் தேவை. இவற்றை சம அளவு நீங்கள் உங்கள் முயற்சிகளில் காட்டினால் கட்டாயம் வெற்றி அடைவீர்கள்.

Muyarchi
Muyarchi

இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எதையும், எளிதாக எதிர் கொள்ள உங்களால் முடியும்.

 

ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்கு என்று தனி திறமை கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும். அது என்ன என்று கண்டுபிடித்தால் உங்கள் வாழ்க்கை சுலபமாகும்.

 

கடின முயற்சியால் சாதித்தவர்கள் பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டிய அவசியமே இல்லை.எனினும் உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசனை எடுத்துக் கொள்ளுங்கள் 999 முறை தோல்விகளை சந்தித்து தான் 1000 வது முறை மின் விளக்கை கண்டுபிடித்தார்.

 

இப்போது சொல்லுங்கள் இவரது விடா முயற்சிக்கு கிடைத்த பலனை நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா. இவ்வளவு ஏன் ராமநாதபுரத்தில் இருக்கும் வீடுகளுக்கு பத்திரிக்கை போட்ட சிறுவன் பின் நாளில் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக மாறவில்லையா?

Muyarchi
Muyarchi

அது போலவே ஜமைக்கா நாட்டில் எளிய குடும்பத்தில் பிறந்து, மூன்று முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்கத்தை வென்று குவித்த உசைன் போல்டின் கடின முயற்சிக்கு ஈடு இணை ஏதாவது உள்ளதா.

 

எனவே நீங்கள் உங்கள் இலக்குகளை விஸ்தரியுங்கள், வானமும் வசப்படும் என்ற நேர்மறையான எண்ணம் உங்களுக்குள் இருக்கும் வரை, உங்கள் விடாமுயற்சி உங்களை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும்.

 

மேலும் வெற்றியின் ரகசியம் முயற்சி தான் என்பதை புரிந்து கொண்டால், எவர் கைவிட்டாலும் உங்கள் தன்னம்பிக்கை உங்களிடம் உள்ள வரை உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.