• December 3, 2024

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வேண்டுமா? – இனி இத ஃபாலோ செய்யுங்க..

 மாபெரும் சபைதனில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வேண்டுமா? – இனி இத ஃபாலோ செய்யுங்க..

victory

ஒருவன் வாழ்க்கையில் வெற்றிகளை அடைய அவனது நம்பிக்கை, அதுவும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கையோடு முயற்சியும் இணைந்து விட்டால் அவனது வெற்றியை எவரும் தடை செய்ய முடியாது.

 

இதனைத் தான், எத்தகைய கைகள் என்னை தள்ளி விட்டாலும் உன் நம்பிக்கை ஒன்று இருந்தால் அது என்றுமே உன்னை கைவிடாது என்று கூறி இருக்கிறார்கள்.

 

எத்தகைய மனிதனாலும் ஒரு வெற்றி இலக்கை அவ்வளவு சாதாரணமாக எட்டிப் பிடிக்க முடியாது. அந்த இலக்குகளை அடைய பல்வகையான கஷ்டங்களை அனுபவித்து இருப்பான். எதையும் எதிர்த்துப் போராடினால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும்.

victory
victory

உன்னால் முடியாது என்று நீ நினைப்பது உன்னுடைய பலவீனமாகும். உன்னால் எதுவும் முடியும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டால் உன் இலக்குகளை தாண்டி நீ கண்ட கனவையும் எதார்த்தம் ஆக்க முடியும்.

 

நீ வெற்றியடைய வேண்டும் என்றால் உன்னை நீயே ஊக்கப்படுத்திக் கொள், நீ உன்னை ஊக்கப்படுத்துவதன் மூலம் உனது முயற்சி அதிகரிக்கும்.

 

ஓடும்போது விழுந்து விடுவோமோ, என்று நினைப்பவனை விட விழுந்து விட்டாலும் எழுந்து ஓடுவேன் என்று நினைப்பவனே வெற்றி அடைவான்.

 

எனவே மன தைரியத்தோடு எதையும் உன்னால் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தோடு நீ இருந்தால் மட்டுமே உன் வாழ்க்கையில் வெற்றியை  எளிதில் பார்க்க முடியும்.

 

வெற்றியை காண்பதற்கு முன்பு ஆயிரம் தோல்விகள் உங்களை வந்து சேரலாம். ஆனாலும் அந்த ஆயிரம் தோல்விகளையும் நீ ஒரு விஷயத்தில் அடைந்தால் கூட சலிக்காமல் போராடக்கூடிய குணம் உன்னிடம் இருக்குமானால் நிச்சயமாக இந்த உலகின் வெற்றியாளன் நீ என்பதை புரிந்து கொள்.

victory
victory

எந்த விஷயத்தை நீ எளிதில் புரிந்து கொள்கிறோயோ, அது புரிந்த பின் தேவை எது, தேவையில்லாதது எது என்று பிரித்தறியக்கூடிய திறமை உனக்குள் பிறந்து விட்டால் உன் தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கும்.

 

உன் வாழ்க்கையில் நீ ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை, உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு உனக்கு என்று ஒரு புதிய பாதையில் நீ நடை போடு கட்டாயம் உன்னால் வெற்றியடைய முடியும்.

 

ஒவ்வொரு வாழ்க்கையிலும் கரடு, முரடுகள் இருப்பது சகஜம் தான் அதையெல்லாம் பார்த்து பயந்து ஒதுங்காமல் பிறப்பது ஒரு முறை தான் என்ன நடக்கும் என்பதை பார்த்து விடலாம் என்று தன்னம்பிக்கையோடு, தைரியமாக உங்கள் கனவுகளை நோக்கி நகர ஆரம்பியுங்கள்.