• December 5, 2024

என்னையா சொல்றீங்க.. ஏஐ (AI) – இறந்தவர்களை பேச வைக்க முடியுமா?..

 என்னையா சொல்றீங்க.. ஏஐ (AI) – இறந்தவர்களை பேச வைக்க முடியுமா?..

AI digital

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறை தான் ஏஐ என்று அழைக்கப்படுகின்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களை உங்களோடு பேச வைக்க முடியும்.

இந்தத் துறை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், புதிய தொழில் நுட்பத்திற்கு சிலர் ஆதரவு அளித்து தான் வருகிறார்கள். ஆபத்தானதாக கருதப்படும் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சத்தின் மூலம் இறந்த ஒருவர் டிஜிட்டல் தளங்களில் விட்டு செல்லும் தடயங்களை வைத்து அவருடன் நாம் பேச முடியும் என்ற உண்மையை பகிர்ந்து இருக்கிறார்கள்.

AI digital
AI digital

இதற்காக இறந்து போன நபர்களின் எழுத்துக்கள், புகைப்படங்கள், அவர்களால் உருவாக்கப்பட்ட கலை படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் எளிதில் பேச முடியும்.

இதனை அடுத்து இந்த டிஜிட்டல் துறையை தற்போது டிஜிட்டல் மாந்திரீகம் என்று அழைக்கிறார்கள். நாம் டாலி போன்ற ஏஐ படம் வரையும் போது இந்த படத்தை வான்கோ ஸ்டைலில் வரைந்து கொடு என்போமே.. அதன் நீட்சி தான் இந்த புதிய தொழில்நுட்பம்.

இறந்தவர்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்தல் 2010 ஆம் ஆண்டுகளிலேயே நடந்தது. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் மைக்கேல் ஜாக்சன், ப்ரூஸ்லீ போன்ற நடிகர்களை டீ பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறு உருவாக்கம் செய்தார்கள்.

AI digital
AI digital

இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் ஓபன் தொழில் நுட்பத்துடன் இறந்த தனது காதலியின் முன்னாள் உரையாடல்கள் மற்றும் ஈமெயில்களை பயன்படுத்தி அவருடன் சேட் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதில் முக்கியமான நபர்களை இழந்து தவிப்பவர்களுக்கு இது ஆறுதலை தரக்கூடியதாகவும் அவர்களது வலியை சற்று தனிக்க கூடிய வகையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மனித உணர்வுகளுக்கு இது ஊறு விளைவிக்கும் என்று பலரும் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

AI digital
AI digital

எனினும் எந்தத் துறையின் மூலம் மனித குலத்திற்கு நன்மை ஏற்படுமா? அல்லது தீமை ஏற்படுமா? என்பது இனி வரும் காலங்களில்  வெட்ட வெளிச்சத்துக்கு வரும் அதுவரை நாம் காத்திருப்பது மிகவும் சிறப்பானது.

இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.