“டாஸ்மேனியன் புலி அழிந்து போன விலங்கினம்..!” – மீண்டும் பராக்..பராக்..
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இனமான டாஸ் மேனியன் புலி விலங்கை மீண்டும் உயிர்பிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த புலி இனமானது கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் வேட்டையாடல் உட்பட்ட பல்வேறு காரணங்களின் காரணத்தால் அழிந்து போனது. தைலசின் என்று அழைக்கப்படும் இந்த டாஸ் மேனியன் புலி இனமானது ஆஸ்திரேலியாவின் டாஸ்மெனியத் தீவை தவிர உலகின் வேறு பகுதிகளில் இருந்தவை அனைத்தும் முற்றிலும் அழிந்து போனது.
அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு 5000க்கும் மேற்பட்ட டாஸ்மீனிய புலிகள் டாஸ்மேனிய காடுகளில் இருந்ததாக குறிப்புகள் உள்ளது. இதனை அடுத்து இந்த விலங்கினத்தின் மீது கொண்டிருந்த அச்சத்தின் காரணத்தால் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவை அதிகளவு வேட்டையாடப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மீனிய புலி ஒன்று டாஸ்மேனியாவில் உள்ள ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் 1936 ஆம் ஆண்டு இறந்தது. இந்த புலியின் பெயர் பெஞ்சமின். இதனை அடுத்து இந்த புலி இனத்தை மீண்டும் உலகுக்கு கொண்டுவர ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பண்டைய டாஸ்மேனிய புலிகளின் டிஎன்ஏ மீட்டெடுக்கப்பட்டு செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயற்சித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் டாஸ்மேனியப் புலிகள் பூமியில் உலா வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இதற்காக டாஸ்மேனிய புலியின் உடலில் இருந்து ஆர் என் ஏ வை ஆய்வாளர்கள் பகுத்து எடுத்து இருக்கிறார்கள். இதனைக் கொண்டு இந்த புலிகளை உயிர்ப்பிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்ட கொலோசல் பயோ சயின்ஸ் நிறுவனத்திடம் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
சுமார் 15 மில்லியன் அளவு இந்த ஆய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த டாஸ்மேனீய புலிகளின் உடலில் புலியைப் போல் வரிகள் இருப்பதால் அதற்கு டாஸ்மீரியன் புலி என்று பெயர் ஏற்பட்டது. ஆனால் இது பார்ப்பதற்கு ஓநாயின் தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
விஞ்ஞானிகளின் இந்த முயற்சியை வெற்றி அடையக்கூடிய பட்சத்தில் இதுபோன்று அழிவு நிலையில் இருக்கும் உயிர்கள் மற்றும் அழிந்து போன விலங்கினங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முடியும்.
உங்களுக்கும் எந்த ஆய்வுகள் தொடர்பான செய்திகள் ஏதேனும் தெரிந்திருந்தால், மறக்காமல் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.