• October 8, 2024

“பாம்புகள் மட்டும் வாழும் தீவு ..!” – மனிதர்களுக்கு நோ என்ட்ரி..!

 “பாம்புகள் மட்டும் வாழும் தீவு ..!” – மனிதர்களுக்கு நோ என்ட்ரி..!

உங்களது ஆச்சரியத்திற்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த கட்டுரை இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அது போலத்தான் மனிதர்கள் வாழ முடியாத, செல்ல முடியாத ஒரு தீவு அங்கு பாம்புகளுக்கும் மட்டுமே இடம் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு தீவை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்க போகிறோம். இந்தப் பகுதியானது அட்லாண்டிக் பெருங்கடலில் அருகே இருக்கக்கூடிய பிரேசில் நாட்டில் ஷாம்போலோ என்ற பகுதியில் உள்ளது.

snake island
snake island

இந்த தீவானது சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சதுர மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மனிதர்கள் வாழ முடியாத இந்த தீவில் உலகில் வேறு எங்கும் காண முடியாத அளவு பல்வேறு வகையான பாம்புகள் அதிகமாக உள்ளது என்றால் உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் இந்த தீவில் நீங்கள் நடந்து செல்லும் போது மூன்று அடிக்கு இவ்வளவு பாம்புகளா? என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு பாம்புகளின் எண்ணிக்கை அதிகளவு இருக்கும். கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் வசிக்கும் இந்த தீவை பாம்புகளின் தீவு என்று கூறி வருகிறார்கள்.

மேலும் இந்தப் பாம்புகளின் இருப்பிடத்தை மாற்றி எங்கு மனிதர்களை குடி ஏற்ற வேண்டும் என்று பிரேசில் அரசு நினைத்தபோதும் அதை செயல்படுத்த முடியாமல் போனது.இதற்கு காரணம் சிறிதளவு மனிதர்களின் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலும் உடனடியாக பாம்புகள் தங்கள் வேலையை காட்டி விடுவதால் அங்கு செல்லும் மனிதர்களுக்கு இறப்பு உறுதி.

snake island
snake island

எனவே தான் மனிதர்களை அந்த தீவுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்த அரசு விதித்திருக்கிறது. அதிக விஷம் நிறைந்த பாம்பாகிய கோல்டன் லேண்ட்செட் பாம்பு இந்த தீவில் அதிக அளவு காணப்படுகிறது. இந்தப் பாம்பு கடித்து விட்டால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திலேயே உயிர் போய்விடுமாம்.

பிரோசில் அரசு இந்த தீவுக்குள்  யாரும் தெரியாமல் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு கலங்கரை விளக்கத்தை அமைத்து அதில் ஒரு குடும்பத்தையும் இருக்க வைத்தது. எனினும் குடும்பத்தார் உறங்கும் போது ஒரு ஜன்னல் கதவை திறந்து வைத்ததின் காரணத்தால் குடும்பத்தில் இருந்த அனைத்து நபர்களும் இறந்து விட்டார்கள்.

இன்று வரை மனிதர்கள் நுழைந்து சென்று அனுபவிக்க முடியாத தீவாக இந்த தீவு விளங்குகிறது என்றால் அது உண்மையானது தான்.