• May 15, 2024

“7,700 உயரத்தில் மர்மமான முறையில் திருடர்களின் கைவரிசை..!” – பலே கில்லாடிகள்..

 “7,700 உயரத்தில் மர்மமான முறையில் திருடர்களின் கைவரிசை..!” – பலே கில்லாடிகள்..

thieves climb

உலக அளவில் திருட்டு என்பது பல வகைகளில் நடைபெற்று வருகிறது. திருடுவதற்கு என்று பலவிதமான டெக்னாலஜிகளை பயன்படுத்தி நூதன முறையில் நடக்கும் திருட்டு பூட்டிய வீட்டுக்குள், கோவிலுக்குள், பொது இடங்களில் நடந்து வருகிறது.


ஆனால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு 7,700 அடி உயரத்தில் இருக்கக்கூடிய பகுதியில் திருட்டு நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

thieves climb
thieves climb

இந்த உயரத்தில் கொள்ளை அடிப்பதற்கு என மிகவும் கரடு முரடான பாதையில் உயிரை பணயம் வைத்து எப்படி கொள்ளை அடிக்க முயற்சி செய்தார்கள் என்ற மர்மம் மக்கள் மனதில் ஒரு புரியாத புதிராக உள்ளது.


இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் இருக்கும் பகுதியில் தான் நடந்து உள்ளது. கட்டாயம் எதையாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திருட்டு கும்பல் தங்கள் உயிரை பணயம் வைத்து குறுகிய பள்ளத்தாக்குகளை கடந்து கொள்ளை அடித்த விஷயம் தற்போது உலக மக்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

thieves climb
thieves climb

சுவிட்சர்லாந்தில் VIAFERRATA என்ற பிரபலமான க்ளைம்பிங் கிளப் உள்ளது. இந்தக் குழு facebook பக்கத்தில் 2350 மீட்டர் உயரத்தில் 7700 அடி உயரம் கொண்ட பகுதியில் ஒரு நன்கொடை பெட்டியை வைத்து உள்ளது என்ற செய்தியை பகிர்ந்தது.

மேலும் அந்த பெட்டி வைக்கப்பட்ட திசைகள் உடைய படத்தையும் பகிர்ந்து இருந்தது. நன்கொடை பெட்டியில் இருக்கும் பணத்தை திருடுவதற்காக திருடர்கள் திட்டம் தீட்டியதோடு கரடு முரடான அந்த பாதையில் எப்படி சென்று திருடுவது என்பதற்கான வழிகளை கண்டறிந்தார்கள்.

அப்படி அந்தப் பகுதியில் சென்று திருட மலையேறும் திறன் மற்றும் திறமை மிக்க திருடர்கள் தேவை என்பதை உணர்ந்து, நீண்ட நாட்கள் திட்டமிட்டு அந்த பெரிய கடினமான நிலப்பரப்பு மற்றும் கரடு முரடான பாதையில் ஏறிச்சென்று திருடுவது சாதாரண விஷயம் அல்ல திறமைசாலிகள் மட்டுமே இதை செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.


thieves climb
thieves climb

இவர்கள் திருட திட்டமிட்டதோடு மட்டுமல்லாமல் மலை ஏறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். பணத்தை கொள்ளை அடிப்பதற்காக அந்த கனமான கருவியை பயன்படுத்தி பெட்டியை உடைத்து இருக்கலாம்.

இதை அடுத்து திருடர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்திருந்தால் இந்த கடினமான பாதையில் சென்று திருடி இருப்பார்கள் என்று பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.