• December 5, 2024

“வளரும் நந்தி.. வற்றாத குளம்.. மர்மமான யாகந்தி கோவில்..!” – ஓர் அலசல்..

 “வளரும் நந்தி.. வற்றாத குளம்.. மர்மமான யாகந்தி கோவில்..!” – ஓர் அலசல்..

Yaganti Temple

இந்தியாவில் கோயில்களுக்கு குறைவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற கோயில்கள் காணப்படுகிறது. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாகி இருப்பதோடு பலவிதமான சிறப்புகளை தன்அகத்தே கொண்டுள்ளது.

இந்தக் கோயில்களின் கட்டிட அமைப்பு, சிற்பங்கள் போன்றவற்றில் விதவிதமான நுட்பங்களை நாம் காண முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கூட கண்டுபிடிக்க முடியாத சில மர்மமான அமைப்புகள் இந்த கோவில்களில் காணப்படுகிறது.

Yaganti Temple
Yaganti Temple

இந்த மர்மத்தின் காரணம் என்ன என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கான சரியான வழிகளும் எவருக்கும் தெரியவில்லை என கூறலாம். அந்த வகையில் இன்று பல வகையான மர்மங்களை கொண்டிருக்கும் யாகந்தி கோவில் பற்றிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்த கோவிலானது ஆந்திர பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த கோவிலில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் நீர்மட்டம் இருப்பது போல நந்தி சிலை மற்றும் காகங்கள் இல்லாத பகுதியாக காணப்படுகிறது.

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரி கோயில் என்று அழைக்கப்படக்கூடிய எந்த கோவிலில் சிவ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் கோவில் வைணவ முறைப்படி கட்டப்பட்டதற்கு காரணம் அகஸ்திய முனிவர் என்று கூறுகிறார்கள். 

மேலும் பெருமாளுக்காக கட்ட விரும்பிய எந்த கோவில் சிலை செய்யும்போது கால் விரல் உடைந்ததால் அந்த சிலையை நிறுவ முடியவில்லை. எனவேதான் சிவன் கோயிலை தீர்மானித்து இருக்கிறார்கள்.

Yaganti Temple
Yaganti Temple

இதனை அடுத்து தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அகத்திய முனிவர் முன் தோன்றி கைலாயம் போல் இந்த இடம் இருப்பதால் தனக்கு ஒரு கோயிலை கட்ட வேண்டி இருக்கிறார். இதை அடுத்து சிவனின் மனைவியான பார்வதிக்கும் சிறப்பு செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து சிவ சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் அகத்திய அர்த்தநாரீஸ்வரர் சிலையை இந்த கோவிலில் நிறுவி இருக்கிறார்.

ஆரம்பத்தில் வைணவ கோயிலாக துவங்கப்பட்டு இறுதியில் சிவன் கோயிலாக மாறிய இந்த யாகந்தி கோவிலின் கருவறையில் உள்ள பிரதான சிவலிங்கத்திற்கு கீழ் 5 நீர் ஊற்றுக்கள் உள்ளது. இந்த நீர் ஊற்றுக்கள் வழியாகத்தான் கோயிலின் பிரதான ராஜகோபுரத்தின் நடுவில் அமைந்துள்ள கோவில் குளத்திற்கு நீர் செல்கிறது.

சிங்கத்தின் கீழ் இரண்டு வரும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இந்த தண்ணீர் கோவிலுக்கு வெளியே பதினாறு ஏக்கர் அளவு மட்டுமே ஓடி வருகிறது. அதற்கும் அதிகமான பகுதியில் ஓடவில்லை.

அதுமட்டுமல்ல இந்த கோவிலில் காகங்களை இல்லை. அவற்றை நீங்கள் உங்கள் கண்களில் காணவே முடியாது. இதற்கு காரணம் அகஸ்தியரின் சாபம் என்று கூறுகிறார்கள். தவம் செய்யும் போது காகங்களால் இடையூறு ஏற்பட்டதன் காரணத்தால் அவை இந்தப் பகுதியில் இருக்கக் கூடாது என்று சபித்ததின் காரணத்தால் தான் இந்தப் பகுதியில் காகங்கள் இல்லை என கூறலாம்.

Yaganti Temple
Yaganti Temple

அதுமட்டுமா? இந்த கோவிலை வளரும் காளை சிலை ஒன்று காணப்படுகிறது. சிவபெருமானின் வாகனமான நந்தி சிலை எப்படி வளர்ந்து வருகிறது என்பதும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

 மேலும் இந்த நந்தி சிலை ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் சிறிய நந்தியாக இருந்த இது தற்போது வளர்ந்து கோயில் வளாகத்தை ஆக்கிரமித்து உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நந்தியானது ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் ஒரு அங்குலம் என்ற அளவில் வளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். எனினும் பல வகையில் ஆராய்ந்து பார்த்தும் அவர்களால் இதைப் பற்றி எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே நீங்களும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடிய பட்சத்தில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். இந்த கோவிலுக்கு அருகே பல குகை கோயில்களும் உள்ளது அவற்றையும் கண்டு மகிழுங்கள்.