தமிழகத்தை அலற விட்ட பல்லடம் படுகொலை..!” – முக்கிய நான்காவது குற்றவாளி கைது..

Palladam Murder
எவ்வளவு தான் சட்டம் தன் கடமையை செய்தாலும், கொலைகளும், குற்றங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஏற்பட்டு வருவதற்கு காரணம் என்ன என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.
பல்வேறு வகையான கொலை வழக்குகளை தமிழகம் பார்த்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தையே கொலை நடுங்க வைத்த பல்லடம் படுகொலை மக்கள் மத்தியில் திகிலை கிளப்பி விட்டுள்ளது என கூறலாம்.
இதனை அடுத்து பல்லடம் அருகே நடந்த நான்கு பேர் படுகொலை சம்பவத்தில் நான்காவது முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் என்ற ராஜ்குமாரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.

இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கக்கூடிய கள்ளகிணறு குறை தோட்டம் பகுதியில் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது. அந்தப் பகுதியை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் மோகன்ராஜ் மற்றும் அவரது தாயாரான புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்று பார்க்கையில் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டது மற்றும் ஹோட்டல் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை அத்தோடு ஹோட்டல் கடன் பாக்கி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடக்கூடிய தீவிரமான பணியை போலீசார் செய்தனர். மேலும் வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகளை அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடினார்கள்.
போலீசாரின் தேடலில் முதலில் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தப்பி ஓடும் போது கை கால்களில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து வெங்கடேஷ், சோனை முத்தையா, இருவரும் திருப்பூர் போலீசில் தானாகவே சரணடைந்தன. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட வெங்கடேசனின் தந்தை ஐயப்பன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த வழக்கில் திருப்பங்கள் ஏற்படுமா? என்பது இனி போலீசாரின் விசாரணை மூலம் தெரிய வரும்.
மேலும் இந்த படுகொலை எதற்காக நடந்தது என்பது போலீசாரின் விசாரணை மூலம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என கூறலாம்.