• July 27, 2024

 “தமிழனின் சம்மணம் இட்டு அமரும் முறை..!” – ஆரோக்கியத்தை அள்ளித் தருமா? அறிவியல் என்ன சொல்கிறது..

  “தமிழனின் சம்மணம் இட்டு அமரும் முறை..!” – ஆரோக்கியத்தை அள்ளித் தருமா? அறிவியல் என்ன சொல்கிறது..

sit criss cross

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கமும் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் இருந்துள்ளது என்பதை எள்ளளவும் ஐயம் இல்லாமல் கூறலாம்.

எனினும் இன்று பல்கிப் பெருகி இருக்கும் நாகரிக வளர்ச்சிகளும், நாம் கடைப்பிடித்த பாரம்பரிய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் விட்டு எறிந்ததாலும் பலவிதமான பாதிப்புகள் நமது ஆரோக்கியத்தில் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எண்ணற்ற சீர்கேடுகளை அடைந்து வருகிறார்கள்.

sit criss cross
sit criss cross

ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மேற்கொண்டு வந்த நமது முன்னோர்கள் 100 ஆண்டு வரை எந்தவித நோய்களின் தாக்கத்திற்கும் உள்ளாகாமல் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றோ நோய்களின் கூடாரமாக நமது இளம் தலைமுறை சிக்கி சீரழிகிறது என்றால், அதற்கு காரணம் நமது பழக்க வழக்கங்களை விட்டு மேற்கத்திய நாகரிகத்தின் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியது தான்.

அந்த வகையில் தமிழர்களின் மிக முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்றான சம்மணம் கால் போடும் பழக்கம் என்று மறைந்து வருகிறது என்று கூறலாம். தரையில் அமருவதையே கௌரவக் குறைவாக நினைக்கக்கூடிய இந்த தலைமுறை மூலம் ஏற்படுகின்ற பல்வகையான நன்மைகளை இழந்து தனக்கு ஏற்படும் சங்கடங்களை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

sit criss cross
sit criss cross

அட.. அப்படி என்ன இந்த சம்மணம் கால் போடுவதால் நமக்கு கிடைக்கிறது என்று நினைப்பீர்கள். பொதுவாக நாம் எப்போதுமே காலை தொங்க வைத்துக் கொண்டு தான் அதிக நேரம் அமர்ந்திருப்போம். உதாரணமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செல்லும் போது, பேருந்தில் செல்லும் போது, பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யும் போது, நாற்காலி, கட்டில் போன்றவற்றில் காலை தொங்க வைத்துக் கொண்டுதான் அமர்ந்திருப்போம்.

இப்படி காலை தொங்க வைத்துக்கொண்டு பணி புரிவதும் வேலை செய்வதும் பல்வேறு விதமான பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகிறது. மேலும் அறிவியல் ரீதியாக பார்க்கும் போது காலை தொங்க போட்டு அமர்வதால் உடலின் ரத்த ஓட்டம் இடுப்புக்கு கீழ் பகுதிக்கு அதிகமாக செல்லும். அதுவே காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்போது இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

sit criss cross
sit criss cross

இதன் மூலம் உடலில் முக்கிய உறுப்புகளாக கருதப்படும் சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது போன்றவற்றிற்கு தேவையான அளவு ரத்த ஓட்டம் கிடைக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்க போடாமல் அவரது ஆரோக்கியத்தையும், சக்தியையும் மேம்படுத்திக் கொள்ள சமணங்கால் போட்டு அமருவதே மிகவும் சிறப்பான முறையாகும்.

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது தான் நாகரீகம் என்று நினைத்து சாப்பிடும் போது தரையில் அமர்ந்து கால்களை மடக்கி சம்மணம் போட்டு சாப்பிட்டு வந்த தலைமுறை எங்கே போனது, என்று கேட்கக் கூடிய அளவு இன்று டைனிங் டேபிளில் அமர்ந்தும், நின்று கொண்டு சாப்பிடக்கூடிய பழக்கங்கள் பல்கிப் பெருகிவிட்டது.

sit criss cross
sit criss cross

அறிவியல் முறைப்படி நாம் அமர்ந்து கொண்டு அதுவும் சமணங்கள் போட்டு அமர்ந்து கொண்டு சாப்பிடும் போது இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்கு செல்வதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறுகிறது. அதுவே காலை தொங்கப் போட்டுக் கொண்டு நாற்காலிகள் அமர்ந்தோ அல்லது நின்று கொண்டு சாப்பிடும் போது இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்கு செல்லாமல் காலுக்கு அதிகமாக செல்கிறது.

எனவே இனியாவது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் சம்மனங்கால் போட்டு தரையில் உட்காருவதின் மூலம் உங்கள் உடம்புக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

sit criss cross
sit criss cross

எனவே காலை தொங்கவிட்டு அமர்வதை தவிர்த்து விட்டு எப்போதும் தரையில் சாப்பிடும் போது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு சாப்பிட்டால் உங்களுக்கு ஜீரண சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

இனி மேலாவது சம்மணம் போடும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டால் உங்களது ஆரோக்கியம் மேம்படும். இதை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் இளமையிலேயே இந்தப் பழக்கம் அவர்களுக்கு சிறப்பான ஆரோக்கியத்தை ஏற்படுத்தித் தரும்.