• July 27, 2024

இந்தியாவிற்கு திரும்பி வராத திப்புவின் பொக்கிஷங்கள்..! என்ன தெரியுமா?..

 இந்தியாவிற்கு திரும்பி வராத திப்புவின் பொக்கிஷங்கள்..! என்ன தெரியுமா?..

Tipu-sultan

வெள்ளையனையே நடுங்க வைத்த புலி திப்பு சுல்தான் தனது சாதுரியமான போரிடும் திறமையால் அனைவராலும் புகழப்பட்ட இவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த கோட்டையில் ஆறு புலிகளை உண்மையாக வளர்த்து வந்திருக்கிறார்.

 

அதுமட்டுமல்லாமல் திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக் கொண்டே இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வாளின் கை பிடி பகுதிகளில் புலி உறும்பும் வண்ணம் அதன் தலை செதுக்கப்பட்டுள்ளது.

Tipu-sultan
Tipu-sultan

எனவே தான் என்னவோ வெள்ளையன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்ற பட்டப் பெயரில் அழைத்து வந்தார்கள். தனது பிரெஞ்சுக்கார நண்பருடன் வேட்டைக்கு சென்றிருந்த வேளையில் புலி ஒன்று பிரஞ்சுக்காரர் மீது பாய்ந்து அடுத்ததாக திப்புவின் மீது பாய ஆக்ரோசத்தோடு திரும்பிய சமயத்தில் புலியின் முகமும், திப்புவின் முகமும் மிக நெருக்கமாக இருந்த சமயத்தில் தனது குறு வாளால் புலியை தாக்கியவர்.

 

 1799 இல் நான்காவது ஆங்கிலேய மைசூர் போரில் திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்ட சமயத்தில் ஸ்ரீரங்கம் கோட்டை கம்பெனி வசமான பின்னர் அங்கிருந்த செல்வங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் அபகரிக்கப்பட்டது. அதில் புலி பொம்மை ஒன்று உள்ளது. தற்போது இந்த பொம்மையானது விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tipu-sultan
Tipu-sultan

மேலும் 1789 திரு விதாங்கூர் கோட்டை பகுதியில் நடந்த போரில் திப்புவின் வாள் ஒன்று பிரிட்டன் அரசால் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அது மட்டுமல்லாமல் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், துப்பாக்கி, பாக்கு பெட்டி, தங்க மோதிரம், கேடயம் போன்றவை இங்கிலாந்து நாட்டில் இருந்த ஒரு தம்பதிகள் வீட்டில் இருந்தது.

 

இந்த பொருட்கள் அனைத்தும் திப்புவின் உடையது என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த தம்பதிகளும் இந்த பொருட்களை இந்தியாவுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறார்கள். இதனையே இந்திய அரசும் இந்தியா பிரைவேட் ப்ராஜெக்ட் அமைப்பும் நம் நாட்டிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும் அது இன்று  வரை திரும்ப கிடைக்கவில்லை.

 

மேலும் அந்த பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டது. இன்று வரை ஹைதர் அலியின் மகனான திப்புவின் பொருட்கள் நம் நாட்டிற்கு கிடைக்காதது மனதில் கஷ்டமாகவே உள்ளது.

 


1 Comment

  • Very nice

Comments are closed.