• June 17, 2024

உலகிலேயே பழமையான சிவலிங்கம்..! வேற்று கிரக கடவுளா? – குடிமல்லம்..

 உலகிலேயே பழமையான சிவலிங்கம்..! வேற்று கிரக கடவுளா? – குடிமல்லம்..

Gudimallam Lingam

ஆந்திராவில் இருக்கும் ரேணிகுண்டாவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் தான் குடிமல்லம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமானது ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


 

 இந்த அழகான ஆற்றங்கரையில் பரசுராமேஸ்வரர் என்ற பெயரில் சிவ ஆலயம் பக்தர்களால் இன்றளவும் வணங்கக்கூடிய அற்புதமான கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலில் இருக்கும் சிவலிங்கம் தான் உலகிலேயே மிகவும் பழமையான சிவலிங்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


 

இந்த லிங்கத்தின் காலமானது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்திருக்கலாம் என்றும் மிகப் பழமையான இந்த கோயிலில் மூலவர் சிவனோடு மும்மூர்த்திகளையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

Gudimallam Lingam
Gudimallam Lingam

சிவனின் கையில் பரசுவையும் மற்றொரு கையில் ஆட்டுக்கிடாவையும் வைத்துக்கொண்டு இருப்பதால் இந்த சிவனுக்கு பரசுராமர் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். மேலும் இங்கு இருக்கக்கூடிய சிவன் வழக்கத்துக்கு மாறாக ஆறடி பள்ளத்தில் நின்று காட்சி அளிப்பதால் தான் இந்த கிராமத்துக்கு குடி பள்ளம் என்ற பெயர் ஏற்பட்டது.

 


இந்தக் கோயிலில் பல மர்மங்கள் புதைந்து இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள். இந்த கோயிலின் அடியில் ரகசிய சுரங்கங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கு கல் போல் இருக்கும் இது ஒரு சுவரை உருவாக்குவதோடு கதவு போல செயல்படலாம்.

 

இந்தக் கோயிலில் இருக்கக்கூடிய ஒன்பது வகையான பாதைகள் வரைபடத்தில் உள்ளது. இவை அனைத்துமே நிலத்துக்கு அடியில் நம்மை அழைத்துச் செல்லும் கோயில் இருக்கும் சுவர்கள் அனைத்துமே சாதாரணமாக தெரிந்தாலும் செவ்வக கிரானைட்களால் செய்யப்பட்டுள்ளது போல் உள்ளது.


 

குறிப்பாக ஒன்பது குறிப்பிட்ட கற்கள் இங்கு உள்ளது. இவை அனைத்துமே பூமிக்கு அடியில் செல்ல ரகசிய பாதையாக இருக்கலாம் என்றும் அவை திறக்கும் வகையில் உள்ளது என்றும் உள்ளூர் வாசிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.


Gudimallam Lingam
Gudimallam Lingam

குடி என்றால் கோவில் மல்லம் என்றால் பள்ளம் நிலத்தடியில் தரை மட்டத்திற்கு கீழ் சிவலிங்கம் இங்கு உள்ளதால் தான் இதை குடி மல்லம் என்று அழைத்திருக்கிறார்கள். உருளை வடிவில் இருக்கும் லிங்கம் அதிசயத்தக்க கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலையின் மேற்புறம் சிவனின் முதல் சிலை ஒரு பல்லஸ் போல் காட்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நியூ ஷெப்பர்ட் என்ற விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் வடிவமும் இதைப் போலவே உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.


 

இதனை அடுத்து இந்த கோவிலில் இருக்கும் சிவன் சிலை ஏன் வேற்று கிரகத்தில் இருந்து வந்து செய்திருக்க மாட்டார்களா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. இந்த சிவலிங்கமானது ஃபாலிக் சின்னமாக சில கருதுகிறார்கள். இது ஏரோ டைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.


 

மேலும் இந்த சிலையை பற்றி சுவாரசியமான விஷயங்கள் உள்ளது. இது நமது கிரகத்துக்கு சொந்தமில்லாத ஒரு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். இந்த கல் 5 அடிக்கு மேல் உயரமாக உள்ளது மேலும் கடினமான கரும்பழுப்பு நிற பாறையாக  உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.Gudimallam Lingam
Gudimallam Lingam

இது போன்ற கற்கள் பூமியில் இல்லை. எனவே இந்த சிவனை வேற்று கிரகவாசிகள் தான் வேறு பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்க வேண்டும் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 


எனினும் இந்த சிவலிங்கமானது உலகிலேயே மிகவும் பழமையானது என்பதை தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டாலும் விசித்திரமான இந்த சிவலிங்கம் பற்றியும் இந்த கோயில் பற்றியும் அறியப்படாத விஷயங்கள் இன்னும் பல புதைந்துள்ளது என்று கூறலாம்.

 நிலத்துக்கடியில் இந்த லிங்கமானது அதிக சக்தியை கொண்டு இருப்பதாக இந்து மதத்தை சார்ந்தோர் நம்புவதோடு நேர்மறை ஆற்றல்களை இது அதிகளவு ஏற்படுத்தும் சக்தி கொண்டது என்பதை கூறியிருக்கிறார்கள்.

 

எனவே இந்த கோயிலைப் பொறுத்தவரை 9 திறப்புகளைக் கொண்ட ஒரு ஜன்னலையும் இவர்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும் சூரிய ஒளி ஆனது உத்திராயண காலத்தில் மையத் துளை வழியாக செல்லும் என்று நம்பப்படுகிறது. இந்த சாளரத்தின் மேல் ஒரு சிறிய வரைபடமும் செதுக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது சிவன் வேற்று கிரகத்திலிருந்து வந்த கிரக கடவுளா? என்ற பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.