• October 3, 2024

இளசுகள் உதட்டை வெட்டும் பழக்கம்..! – முர்சி பழங்குடியினரின் சுவாரசியமான வாழ்க்கை..

 இளசுகள் உதட்டை வெட்டும் பழக்கம்..! – முர்சி பழங்குடியினரின் சுவாரசியமான  வாழ்க்கை..

Mursi Tribe

உலகம் முழுவதுமே பல்வேறு வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்ற  வேளையில் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை போன்றவை பலருக்கும் ஆச்சரியத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் வாழக்கூடிய முர்சி பழங்குடியினரை பற்றி இக்கட்டுறையில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த முர்சி பழங்குடியினர் சூடான் எல்லையில் அமர்ந்திருக்கும் ஓமன் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 10,000 மேற்பட்டோர் இந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று இணையதள தரவுகள் கூறுகிறது.

Mursi Tribe
Mursi Tribe

ஆப்பிரிக்காவில் வசித்து வரும் பழங்குடி இனத்திலேயே இவர்கள்தான் கடைசி இனம் என்று கூறலாம். இவர்களின் பாரம்பரிய உடை மற்றும் பழக்க வழக்கங்கள் பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

 

குறிப்பாக இந்த இனத்தில் இருக்கும் இளம் பெண்கள் தங்களது உதடுகளை வெட்டிக்கொண்டு பெரிய மரத்தட்டுக்கள் அல்லது தட்டுகள் போல் இருக்கும் பொருட்களை அவர்கள் வாயில் சொருகி கொள்கிறார்கள்.

 

குறிப்பாக திருமணம் ஆகாத 15 அல்லது 16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். கீழ் உதடு துண்டாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான தூரம் வரை அந்த உதடுகளை இழுத்து விட்டுக் கொள்கிறார்கள்.

Mursi Tribe
Mursi Tribe

இந்த கஷ்டமான செயல்முறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதோடு, திருமணம் ஆன அல்லது வயது வந்த பெண்களை விட திருமணம் ஆகாத பெண்களை இந்த நடைமுறையை அதிகம் பின்பற்றுவதாகவும், இந்த லிப் கார்டுகளை இவர்கள் திருமணம் மற்றும் பால் கறத்தல் போன்ற நிகழ்வின் போது அணிகிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் தனது கணவனுக்கு உணவினை பரிமாறும் சமயத்தில் பெருமையுடன் இந்த தட்டு ஆபரணத்தை உதட்டில் அணிந்து கொள்ளக்கூடிய இந்த பெண்கள் கணவரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். கணவன் இறந்த பிறகு இந்த பழங்குடி பெண்கள் தங்கள் உடலில் இருக்கும் அந்தப் பகுதியை அப்படியே திறந்து விடுகிறார்கள்.

 

இன்று வரை அவர்களுக்குள் எந்த ஒரு வேற்று நபரையும் உள்ளே நுழைய இந்த பழங்குடியினர் அனுமதிக்கவில்லை மீறி வருபவர்களை கொலை கூட செய்ய தயங்கமாட்டார்கள். எனவே எத்தியோப்பிய அரசனது முர்சிகளின் மனப்பான்மையை அறிந்து கொண்டு அவர்களோடு தொடர்பு கொள்வதை தடை செய்து உள்ளது.

Mursi Tribe
Mursi Tribe

எனினும் இன்று வரை இவர்கள் உதடுகளை எதற்காக இப்படி வெட்டிக் கொண்டு அவஸ்தை படுகிறார்கள் என்ற விஷயம் புரியாத புதிராகவே பலருக்கும் உள்ளது. வித்தியாசமான இது போன்ற சுவாரஸ்ய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள எங்கள் இணையத்தோடு நீங்கள் இணைந்திருங்கள்.