“பொம்மன்-பெள்ளியை பாராட்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!” – யார் இந்த தம்பதிகள்..!
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டை நோக்கி இன்று வருகிறார்.
இவர் டெல்லியில் இருந்து மைசூர் சென்று விட்டு, பின் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி முதுமலையில் இருக்கும் யானைகள் முகாமில் ஆஸ்கார் விருதை வென்று குவித்த ஆவணப்படத்தின் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி இன்று காலை விமானப்படை விமானத்தில் ஜனாதிபதி தமிழகம் நோக்கி புறப்பட்டு வருகிறார்.
இவர் கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து 3 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வந்திரங்குவார். மேலும் இவர் நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள யானைகள் சரணாலயத்தில் சுமார் 3 மணிக்கு மேல் செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இங்கு எதற்காக அவர் செல்கிறார் என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் அண்மையில் வெளிவந்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் தத்ரூபமாக நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து அவர்கள் ஆஸ்கார் விருது பெற்றதை ஊக்குவிக்கும் வகையில் பாராட்ட இருக்கிறார்.
இந்த தம்பதிகள் 2019 ஆம் ஆண்டு முதல் ரகு, பொம்மி குட்டி யானைகளை பராமரிக்கக் கூடிய பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் யானை பாகனாக இருக்கும் பொம்மன் நிரந்தர பணியிலும் பெள்ளி தற்காலிக பணியாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
இவர்கள் இருவரும் நடித்த ஆவண படத்தை இயக்குனர் கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கி இருந்தார். மேலும் இவர் இயக்கிய இந்த திரைப்படமானது ஆஸ்கர் விருதினை வென்ற நிலையில் இந்திய பிரதமர் மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இவர்களை பாராட்டியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் இன்று தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி அவர்களை சந்தித்து மீண்டும் அவர்களை பாராட்ட இருப்பது மிகச் சிறந்த ஒன்றாக அனைவராலும் பேசக்கூடிய நிகழ்வாக மாறி உள்ளது.
இதை எடுத்து தற்போது இந்த செய்தியானது சமூக வலைதளங்களின் மத்தியில் வைவலாக மாறி வருவதோடு அனைவரும் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.