கொள்ளை அடிக்க முடியாத ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி சிலை..! – திருடர்களுக்கு தண்ணி காட்டிய துர்க்கை அம்மன்..
ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி ஆலயம் ஆனது கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன்னு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலானது 108 துர்கை கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த கோயிலின் சிறப்பம்சமே இந்த கோயிலை பரசுராமர் நிறுவினார் என்பது தான். இந்த அம்மனின் பெயருக்கு காரணம் மிருதங்கம் என்ற இசை கருவியின் வடிவத்தில் அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் இந்த துர்க்கை அம்மன் கேரள வர்மா பழசி ராஜாவின் குலதெய்வமாக திகழ்கிறார். போருக்கு செல்வதற்கு முன் பிரதான கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குகை கோயிலில் மன்னர்கள் களபலி கொடுத்த பின்பு தான் போர் செய்ய செல்வார்கள்.
கோயிலில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மனை திருடுவதற்காக திட்டமிட்ட திருடர்கள், இந்த அம்மன் சிலையை திருட முடியாமல் பல முறை தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்.
கோயிலில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மனை திருடுவதற்காக வந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவரிடம் நடத்திய ஆய்வினை பற்றி முன்னாள் கேரள டிஜிபி போலீஸ் அலெக்சாண்டர் ஜேக்கப் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதில் அம்மனை திருடுவதற்காக பல வழிகளில் திட்டமிட்டு இருக்கக்கூடிய திருடர்கள் கோயிலுக்குள் மூன்று முறை நுழைந்தும் அம்மனை திருட முடியாமல் போவதற்காக கூறிய காரணங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கோயிலுக்குள் நுழைந்து சிறையை கடத்த முற்பட்ட போது அவர்களுக்கு அறியாமலேயே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் அடிவயிற்றில் தொடர்ந்து ஏற்பட்ட வலி மற்றும் இயற்கை உபாதையின் காரணமாக அவர்களால் அம்மனை நெருங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
அடுத்த முறை கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சிலையை திருட வேண்டும் என்று திட்டமிட்டு வந்த போது கோயிலின் சிலையானது தெரு பாதையில் அருகில் இருந்த மரத்தடியில் இருப்பதை அந்த திருடர்கள் பார்த்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் மூன்றாவது முறை திருடத் திட்டமிட்ட போது அவர்கள் படுத்து உறங்கிய லாட்ஜில் அம்மனின் திரு உருவத்திலை வைக்கப்பட்டு அது பூஜை செய்த நிலையில் பூக்களோடு இருந்ததாக பகிர் தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பல முறை முயற்சி செய்தும் அம்மனின் ஆற்றல் காரணமாக அவர்களால் அந்த சிலையை திருட முடியாமல் போய் விட்டது, என்பதை இதன் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த கலிகாலத்திலும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்ட மிகச்சிறந்த சக்தி படைத்த துர்க்கை அம்மனாக இந்த அம்மன் விளக்குகிறாள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
அறிவியல் ரீதியாக அந்த திருடர்களின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், உடல் நிலையை ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இதுவரை அறியாத மர்மமாகவே உள்ளது.
எனவே திருடர்கள் நெருங்கியும் அம்மனின் சிலையை திருட முடியாமல் திருடர்களுக்கு தண்ணி காட்டிய ஆற்றல் பொருந்திய தெய்வமாக மிருதங்க சைலேஸ்வரி அம்மன் திகழ்கிறாள்.