• October 3, 2024

“அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட திகில் போட்டி..!” – இதுவும் மலை பாம்போடு..

 “அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட திகில் போட்டி..!” – இதுவும் மலை பாம்போடு..

python

அமெரிக்காவில் இருக்கும் பிளாரிடா மாகாணத்தில் ஆண்டுதோறும் மலை பாம்பு வேட்டை போட்டி நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த போட்டியில் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மலை பாம்புகளை பிடித்து பல்வேறு சாகசங்களை செய்வார்கள்.

இயல்பாகவே பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்ற சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த வகையில் பார்க்கும்போதே மனிதனுள் பயத்தை கிளப்பி விடக் கூடிய அச்சத்தை போக்குவதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று கூறலாம்.

python
python

இந்த போட்டியில் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக பர்மிய வகை நீளமாக வளரக்கூடிய பாம்புகளை வேட்டையாட அதீத தைரியம் தேவை. அந்த வகை பாம்புகளைக் கொண்டு தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் கனடா, பெல்ஜியம், லாட்வியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்று, தங்களது அபார திறனையும், தைரியத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 30 ஆயிரம் டாலர்கள் வரை பரிசுத்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு சமுதாயத்தில் மிகச் சிறந்த புகழ் கிடைப்பதால் சவாலான இந்த போட்டியில் இளைஞர்கள் அதிகளவு ஆர்வத்தோடு பங்கேற்கிறார்கள்.

python
python

மேலும் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பக்கூடிய நபர்கள் ப்ளோரிடாவில் நடைபெறக்கூடிய பாம்பு வேட்டை போட்டிக்காக சுமார் 25 டாலர் கட்டணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அங்கு நடக்கும் 30 நிமிட பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த பிறகு அந்த பாம்புகளை விரைவாக எப்படி பிடிப்பது, எவ்வாறு அடையாளம் காண்பது என்பது போன்ற பயிற்சிகளை அந்தத் திட்டத்தில் தருகிறார்கள்.

போட்டியாளர்கள் பிடிக்கக்கூடிய பாம்புகளை டபுள் பித்திங் (Double pitching) முறையின் மூலம் மட்டுமே கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். இந்த முறையானது பாம்பின் முதுகுத்தண்டை துண்டிக்கும் விதத்தில் அதன் தலையில் குத்தி மூளையை செயலிழக்கக் கூடிய கருவியை பயன்படுத்துவது தான்.

python
python

இந்தப் போட்டியானது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில் பல இளைஞர்களும் இந்த போட்டியில் பங்கேற்க, தங்களது பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அத்தோடு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் கைவசம் நிறைய ஆற்றல் பானங்களை வைத்துள்ள அவர்கள், வேட்டையின்போது பூச்சிகள் தங்களை தாக்காமல் இருப்பதற்காக பிரத்தியேக தெளிப்பான்களை பயன்படுத்துகிறார்கள்.