• July 21, 2024

 “நிலவில் சாதித்த தமிழர்கள்..!” – சந்திரயான் 1 முதல் 3 வரை.. தமிழன்டா..!

  “நிலவில் சாதித்த தமிழர்கள்..!” – சந்திரயான் 1 முதல் 3 வரை.. தமிழன்டா..!

Chandrayaan-1 to 3

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 1 முதல் சந்திரயான் 3 வரை பணி புரிந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா..

தமிழன் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி மூலம் இன்று நிலவின் தென் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பிய விண்கலமானது வெற்றிகரமாக தனது பணியை சீரும் சிறப்புமாக செய்யக்கூடிய வேலைகளை ஆரம்பித்து விட்டது.

Chandrayaan-1 to 3
Chandrayaan-1 to 3

இந்த நிகழ்வில் ஆரம்ப கட்டத்தில் சந்திரயான் 1 ல் மயில்சாமி அண்ணாதுரை என்ற தமிழர் பொறுப்பு ஏற்று பணியாற்றிய நபராவார். இதனை அடுத்து சந்திரயான் 2 திட்டத்தில்  வனிதா முத்தையா தமிழச்சி பொறுப்பு ஏற்று பணி புரிந்தார்.

இதனை அடுத்து நிலவில் அதுவும் தென் பகுதியில் உலகிலேயே முதல் முதலாக தடம் பதித்த இந்தியா உலக நாடுகளின் பார்வையில் தற்போது மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று உள்ளது. இதன் மூலம் நிலவு பற்றிய கனவு நனவாகி விட்டது என்று கூறலாம்.

அந்த வகையில் இந்த சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்த இஸ்ரோவானது இந்த விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவியது.

Chandrayaan-1 to 3
Chandrayaan-1 to 3

சுமார் 40 நாட்கள் பயணம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட இந்த விண்கலத்தில் இருந்து உந்து விசைக்கலன் லேண்டர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தனியாக பிரிந்தது. இவ்வாறு பிரிந்த லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் பயணத்தை மேற்கொண்டது.

இந்நிலையில் நேற்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 40 நாட்களும் கடுமையாக இரவு, பகல் பாராமல் உழைத்து இந்த வரலாற்றுச் சாதனையை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர் ஒரு வீர தமிழர் என்று நாம் மார்தட்டி சொல்லலாம்.

Chandrayaan-1 to 3
Chandrayaan-1 to 3

சந்திரயான் 2 தோல்வியை தந்ததால் மீண்டும் சந்திரயான் 3 விழ்ந்து விடுமோ? என நினைத்தவர்கள் மத்தியில் வீழ்வேன் என நினைத்தாயோ? என்ற வரிகளுக்கு உயிர் கொடுக்கக்கூடிய வகையில் வரலாற்றுச் சாதனையை படைக்க வீர முத்துவேல் என்ற தமிழர் பக்க பலமாக இருந்தார் என்றால் ஒவ்வொரு தமிழரும் அந்த நிமிடத்தில் புலகாங்கிதம் அடைந்தார்கள் என கூறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பள்ளியில் படித்தவர். தனது பள்ளி படிப்புக்குப் பிறகு மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்து, விண்வெளி துறையில் இருந்த ஆர்வம் காரணத்தினால் சென்னையில் இருக்கும் ஷாய் ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர் இவர் திருச்சி ஆர் இ சி கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, சென்னையில் இருக்கும் ஐஐடியில் உயர்கல்வி படித்து ஏரோஸ்பேஸ் துறையில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

Chandrayaan-1 to 3
Chandrayaan-1 to 3

தனது கடினமான உழைப்பாலும், திறமையாலும் இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் இவர், தனக்கு அதிக சம்பளம் கொடுக்கும் வெளிநாட்டு கம்பெனிகளை விடுத்து இந்திய மண்ணிற்காக உழைப்பதற்கு உறுதி பூண்டு இருக்கிறார்.

இவரின் மின் அணு பொதியில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை பற்றிய கட்டுரையானது 2016 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் மூலம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பமானது நிலவில் லேண்டர் தரை இறங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Chandrayaan-1 to 3
Chandrayaan-1 to 3

இதனை அடுத்து சந்திரயான் 2 திட்டத்தில் வீர முத்துவேல் முக்கிய பணிகளை செய்து இருக்கிறார். இந்த அனுபவத்தை வைத்துத்தான் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக தனது அற்புதமான பணியினை செய்து இன்று நிலவில் உலக நாடுகள் சென்று பார்க்காத தென் துருவத்தில் கால் பதிக்க அவரது தொழில்நுட்பம் உதவிகரமாக இருந்துள்ளது.

இமயம் வரை சென்று வெற்றிகொண்ட தமிழ் அரசர்களைப் போல இன்று நிலவையும் வெற்றிகொண்டான் தமிழன் என்று கூறும் அளவிற்கு தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க சந்திரயான் 1 முதல் 3 வரை தமிழன் கலக்கி விட்டான் என்று தான் கூற வேண்டும்.