7 பச்சிளம் குழந்தைகள் ஊசி போட்டு கொலை..! – நர்ஸ் லூசி லெட்பி..
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எனினும் புதிதாக பிறந்த ஏழு பச்சிளம் குழந்தைகளை கொலை செய்யக்கூடிய மனநிலை ஒரு பெண்ணுக்கு அதுவும் நர்சாக பணிபுரியும் பெண்ணிற்கு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது.
இந்த கொலைகள் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், சரியான தண்டனையை கொலை செய்த பெண்மணிக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்து உள்ளது.
குழந்தை பேறு என்பது எவ்வளவு கஷ்டம். அதையும் தாண்டி பல கனவுகளோடு குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே உயிரிழந்து விட்டால் அது எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. அதுவும் 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள கவுண்டெஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் பணிபுரிந்த லூசி லெட்பி பிறந்த குழந்தைகளை வினோதமான முறையில் கொன்று இருக்கிறார்.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக அளவு பால் கொடுத்து மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளதோடு, இன்சுலின் ஊசியை போட்டு மருந்து இல்லாமல் குழந்தையின் உடலில் காற்றை செலுத்தி மொத்தம் ஏழு குழந்தைகளை கொலை செய்து இருக்கிறார்.
சரியான ஆதாரங்கள் இல்லாததால் மூன்று முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவணங்கள் கிடைத்த நிலையில் கைது செய்யப்பட்டார். மேலும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் முக்கிய ஆதாரங்கள் சிக்கியது.
அதில் குறிப்பாக நான் .ஈவு இரக்கம் அற்றவள், நான் தான் இதை செய்தேன் போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்ததை அடுத்து மான்செஸ்டர் கிரவுண்ட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆயுள் தண்டனையை விதித்தது.
உலகில் இது போன்ற கொடூர மனநிலையில் சில மனிதர்கள் இருப்பதை நினைத்துப் பார்க்கும் போது மனது பதைபதைப்பதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.