“பாலி தீவில் மிகப்பெரிய இந்து கோயில்..! – பெசாகி (Bedakih) கோவில் வரலாறு..
உலகம் தோன்றிய பிறகு மக்களால் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களில் ஒன்றாக இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வலுத்து வருகிறது.
எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாக தமிழ் எப்படி திகழ்கிறதோ? அதுபோலவே எல்லா மதங்களுக்கும் தாய் மதமாக இந்து மதம் இருந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் இந்து மதத்தின் சுவடுகள் இந்தியா மட்டுமல்லாமல், உலகில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஒரு சிறு மாற்றத்தோடு உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அந்த வரிசையில் தற்போது இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற போதிலும் அங்கு இருக்கக்கூடிய, இந்து கோயில்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்துக்களின் வரலாற்றை பறைசாற்றும் படி உள்ளது.
மக்கள் சுற்றுலாவுக்கு விரும்பிச் செல்லும் பாலி தீவில் மிகப்பெரிய இந்து கோயில் ஒன்று உள்ளது என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்தக் கோயிலை அங்கு இருப்பவர்கள் தாய் கோயில் என்று தான் அழைக்கிறார்கள். பாலியை அடையாளப் படுத்தக் கூடிய சின்னங்களில் ஒன்றாக கூட இந்த கோயிலை கூறலாம்.
பூரா பெசாகி என்று அழைக்கப்படக்கூடிய இந்தக் கோயில் ஆனது, எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அகுங் மலைப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இந்தக் கோயில் பார்ப்பவர்கள் வியப்படைய கூடிய வகையில் மிக உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
பூரா பெசாகி என்பது ஒரு கோயிலை மட்டும் கொண்டுள்ளது அல்ல, சுமார் 80-கும் மேற்பட்ட சிறிய பெரிய கோயில்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு கோவில் வளாகமாக திகழ்கிறது. இங்கு சுமார் 23 கோயில்கள் தனித்தனியாக காணப்படுகிறது.
இதில் சிறப்பான கோயிலாக விளங்குவது மும்மூர்த்திகளின் கோயில் என்று கூறலாம். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் கோயில்கள் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. மேலும் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் பூரா பென்டகன் அகுங் சிவனுக்கான கோயிலும், வலது புறம் பிரம்மாவுக்காவும், இடது புறம் விஷ்ணுவுக்காக பூரா பாட்டு மடேக் கோவில் உள்ளது.
இந்த கோயில் பற்றிய வரலாறு மிகவும் வித்தியாசமானதாகும். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சாது ஒருவர் மக்களுக்கு வீடு அமைத்து தர உத்தரவிடப்பட்டார். கடவுளின் ஆணையாக இந்த ஆணை வந்ததால் அவரும் வீடுகள் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.
அந்த இடமானது அகுங் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய நாக பெசுகியன் என்ற ராட்சச கடவுளைத் தொடர்ந்து பாசுகி என்ற பெயரைப் பெற்றது. கடைசியில் எந்த பெயர் மறுவி பெசாகி என்று அழைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
வீடு கட்டக்கூடிய பணியில் ஈடுபட்டிருந்த சாதுக்களின் சீடர்கள் நோய் வாய் பட்டும், விபத்துக்கள் ஏற்பட்டும் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் 1343 ஆம் ஆண்டு மஜா பஹித் வம்சத்தினர் இந்த இடத்தை கைப்பற்றி பூரா பெசாகி என்ற பெயரை வைத்துள்ளார்கள்.
இதனை அடுத்து இந்தப் பகுதியில் பல கோயில்கள் கட்டப்பட்டது. மேலும் மகாபாரதம், ராமாயண கதைகளில் தோன்றக்கூடிய கதாபாத்திரங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டும் படிக்கட்டுகளில் பொறிக்கப்பட்டும் உள்ளது.