இந்த மாடர்ன் உலகத்தில் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் WiFi வசதி இருக்கும். ஒரு சில இடங்களில் இலவசமாக WiFi வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் ஒரு சில இடங்களில் கடவுச்சொல் செலுத்தியே WiFi-ஐ உபயோகிக்க முடியும்.
கடவுச்சொல்லை யாரும் அவ்வளவு எளிதில் மற்றவர்களுக்கு பகிர மாட்டார்கள். டெக்ஸாஸ் நகரத்தில் உள்ள யாயா தாய் உணவகத்தில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த WiFi-ஐ பயன்படுத்த Password தேவை.
இந்த கடவுச்சொல்லை கண்டு பிடிக்கும் வேலையை வாடிக்கையாளர்களிடமே அந்த உணவகம் கொடுத்துள்ளது. ஒரு கடினமான கணக்கு புதிரை உணவகத்தில் உள்ள ஒரு பலகையில் wi-fi பாஸ்வேர்டு எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். இந்தக் கணக்குப் புதிரின் விடையே WiFi-ன் கடவுச்சொல் ஆகும்.
உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும்படி இப்படி ஒரு புதிய யுக்தியை இந்த உணவகம் கையாள்கிறது. இதுபோலவே உலகின் வேறு சில இடங்களிலும் WiFi-ன் கடவுச்சொல்லை ஒரு புதிர் கேள்வியின் விடையாக set செய்யும் சேட்டைக்காரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
- பிரம்மாண்ட வாசுகி பாம்பு: 4.7 கோடி ஆண்டுகள் பழமையான மகா பாம்பின் கதை
- காலரா நோயை விரட்டிய ஜல்லிக்கட்டு: நம்ப முடியாத உண்மை கதை!
- இணையத்தில் இலங்கை எப்படி இணைந்துள்ளது? கடலுக்கடியில் மறைந்திருக்கும் ரகசியம்!
- அம்பேத்கரின் மறைந்திருக்கும் பொருளாதார சிந்தனைகள் – நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் வகுத்த பாதை என்ன?
- முளைப்பாரி எடுப்பதன் பின்னணியில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மை தெரியுமா?
அந்த உணவகத்தில் எழுதப்பட்டிருந்த கணக்கு புதிர் அடங்கிய புகைப்படத்தை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.