• October 5, 2024

ஐ.ஐ.டி சீட் கனவை சாத்தியமாகிய சாதனை பெண் !!!

 ஐ.ஐ.டி சீட் கனவை சாத்தியமாகிய சாதனை பெண் !!!

இந்தியாவில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சீட் என்பது ஒரு மிகப் பெரிய கனவாக இருக்கும். கேரளாவில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரின் மகள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மகளை எப்படியாவது பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார்.

Image

இவரது மகள் ஆர்யா இளங்கலைப் பட்டத்தை முடித்துவிட்டு முதுகலை பட்டத்தை ஐ.ஐ.டி -யில் படிக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரவு பகல் பாராமல் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனக் கூறுவது போல இவரது உழைப்புக்கு கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி-யில் பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கான சீட் கிடைத்தது.

ஆர்யாவை பாராட்டி இந்தியன் ஆயில்-ன் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நான் உங்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் பதிவை பகிர விரும்புகிறேன். எங்கள் நிறுவனத்தின் அட்டெண்டன்ட் ராஜகோபாலன் அவர்களின் மகள் ஆர்யா ஐ.ஐ.டி கான்பூரில் படிக்க தகுதி பெற்றுள்ளார். ஆர்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.”, என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.

ஸ்ரீகாந்த் மாதவின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

நெட்டிசன்கள் இப்பதிவிற்கு கீழ் ஆர்யாவை வாழ்த்தி தங்களது வாழ்த்து பதிவுகளை கமெண்ட்டுகளாக பதிவிட்டனர். அதுமட்டுமின்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அவர்களும் ஆர்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

மாணவி ஆர்யா மென்மேலும் படித்து சாதனை புரிய தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது போன்ற பதிவுகளுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.