அழுக்கு Socks-ஐ 20000 ரூபாய்க்கு வாங்கும் அதிசய மனிதர் !!
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு தனித்துவமான வித்தியாசமான பழக்கம் இருக்கும். இங்கிலாந்தில் வாழும் ஒருவர் அழுக்கு சாக்ஸை விலை கொடுத்து வாங்குவதைப் வாடிக்கையாக வைத்துள்ளார்.
சாக்ஸ் அழுக்காக இருந்தால் அதை அணிவதற்கு பெரும்பாலான மனிதர்களுக்கு உடன்பாடு இருக்காது. அதுமட்டுமின்றி அழுக்கு சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றம் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தான ஒன்று.
ஆனால் இங்கிலாந்தில் வாழும் இந்த அதிசய மனிதர் அழுக்கு சாக்ஸில் இருந்து வரும் வாசனையும் அதன் தோற்றமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறுகிறார். மாதத்திற்கு 200 யூரோக்களை அழுக்கு சாக்ஸ்கள் வாங்குவதற்கு இவர் பயன்படுத்துகிறார்.
200 யூரோ என்பது இந்திய மதிப்பின்படி 20 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு மனிதன் அழுக்கு சாக்ஸ்களை வாங்க 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார் என்பதை கேள்விப்படும் போது “இந்த உலகம் எதை நோக்கி போயிக்கிட்டு இருக்கு???”, என நம்மை சிந்திக்க வைக்கிறது.
அழுக்குச் சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தை நுகரும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என அந்த அதிசய ஆசாமி கூறுகிறார். இவர் தன்னைத் தானே Foot Fetish (கால் விரும்பி) என மக்களுக்கு அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
இதில் சிறப்பு என்னவென்றால் 21 முதல் 38 வயது வரை இருக்கும் பெண்களின் அழுக்கு socks-களையே அதிகம் வாங்கி குவித்துள்ளார் இந்த அதிசய மனிதர். சாக்ஸ் மட்டுமின்றி தனிநபர்களின் கால்களின் வீடியோ பதிவையும் காசு கொடுத்து வாங்கி இருக்கிறார் இவர்.
- புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்ப்பது ஏன்? உடல் நலனுக்கு நல்லதா?
- வயல்வெளியில் விமானம் தரையிறங்கினால் என்ன நடக்கும்?
- ஹிட்லரின் யூத வெறுப்பு: நாஜி ஜெர்மனியின் இருண்ட காலம் – ஏன் இந்த பேரழிவு நடந்தது?
- பாம்புகள் பழி வாங்குமா? உண்மையும் புனைவும் – ஓர் அறிவியல் பார்வை
- பத்திரிகை ஓரத்தில் உள்ள வண்ண வட்டங்கள்: அச்சுத் தொழில்நுட்பத்தின் மறைக்கப்பட்ட ரகசியம் தெரியுமா?
இருபதாயிரம் ரூபாய்க்கு அழுக்கு சாக்ஸ் வாங்கும் இந்த ஆசாமியை பற்றி நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.