இந்த நாய் செய்த Cute ஆன காரியத்தை பாருங்கள் !!!
பொதுவாக நாம் வளர்க்கும் நாய்கள் நம் மீது அளவற்ற பாசத்துடன் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாய் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வீட்டில் உள்ள ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து திரும்பும் போது அவனுக்காக காத்திருந்த அவனின் நாய் அவனை வரவேற்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு நாய்களின் பாசம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
அந்த சிறுவனின் பள்ளிப் பேருந்து வருவதற்காக சிறிது நேரம் Bus Stop-ல் அழகாக அமர்ந்து அந்த நாய் காத்திருக்கிறது. பேருந்து வந்தவுடன் அந்த சிறுவனை எதிர்நோக்கி தனது வாலை அழகாக ஆட்டிக் கொண்டே அவனை வரவேற்க இந்த செல்ல நாய் தயாராகிறது.
அந்த சிறுவன் பேருந்தை விட்டு இறங்கியதும் துள்ளிக் குதித்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து சந்தோஷமாக இந்த நாய் வீட்டிற்கு செல்லும் இந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
இந்த வீடியோவானது தங்களை மிகவும் ரசிக்க வைக்கிறது என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த செல்லப்பிராணியின் பாசமிக்க வீடியோ அடங்கிய டுவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.