• October 5, 2024

9.30 மணிநேரம் Plank செய்து சாதனை நிகழ்த்திய Superman !!!

 9.30 மணிநேரம் Plank செய்து சாதனை நிகழ்த்திய Superman !!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட உடற்பயிற்சிகளில் ஒரு பயிற்சியான Plank எனும் உடற்பயிற்சி முறையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் புதிய உலக சாதனையை புரிந்துள்ளார்.

கால்களை நீட்டி கைகளின் உதவியால் ஊன்றி நிற்கும் உடற்பயிற்சியே பிளான்க் என்று அழைக்கப்படும். நீங்கள் Regular-ஆக உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் நான்கு முதல் ஆறு நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருக்கலாம்.

How to Do the Perfect Plank Exercise - Best Abs Workout Moves

ஆனால் ஆஸ்திரேலியாவின் டேனியல் ஸ்கேலி என்பவர் 9:30 மணி நேரம் இந்த Plank உடற்பயிற்சியை மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் வீடியோவானது இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது.

முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் இந்த சாதனை பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் எட்டு மணி நேரம் 15 நிமிடங்கள் பிளான்க் செய்திருந்தது உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது டேனியல் ஸ்கேலி அவரின் சாதனையை வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.

இவரின் இந்த சாதனை வீடியோ கின்னஸ் World Records யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இவரது சாதனைக்கு உலக நாடுகளிலிருந்து பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேனியல் ஸ்கேலின் சாதனை வீடியோவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.