பெற்றோர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா !!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சமீபத்திய ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீரஜ் சோப்ரா இந்திய குடிமகனாக மட்டுமின்றி தனது பெற்றோர்களுக்கு நல்ல மகனாகவும் தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள பலருக்கும் விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீரஜ் சோப்ராவின் பெற்றோர்களுக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இந்த நீண்ட நாள் ஆசையை நீரஜ் சோப்ரா தற்போது தன் பெற்றோர்களுக்கு நிறைவேற்றியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நிறைவேறியுள்ளது, எனது பெற்றோர்களை நான் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வைத்துள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் தனது பெற்றோர்களுடன் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீரஜ் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அணைத்து மகன்களும் தங்களது பெற்றோர்களை எப்படி பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நீரஜ் திகழ்கிறார். இவரின் இந்த ட்விட்டர் பதிவிற்கு, நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் வென்ற மகனாக மட்டும் இல்லாமல் பெற்றோர்களின் தங்கமகனாகவும் விளங்கும் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு Deep Talks Tamil சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீரஜ் சோப்ராவின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.