• July 27, 2024

இந்து மதம் கூறும் ஐந்து அழகிகள் யார்.. யார்.. தெரியுமா?

 இந்து மதம் கூறும் ஐந்து அழகிகள் யார்.. யார்.. தெரியுமா?

Five beauty ladies

இந்து மதத்தில் பெண்களுக்கு என்று அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்து மதத்தில் 5 பேர் அழகிகள் பற்றிய விஷயங்கள் உள்ளது. அந்த அழகிகள் யார்.. யார்? அவர்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவது இடத்தில் இருக்க கூடிய அழகி மோகினி. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படக் கூடிய இந்த மோகினி பார்ப்பதற்கு மிக அழகாகவும் பிறரையும் மயக்கக்கூடிய தன்மை கொண்டவளாகவும் இருந்தாள்.

Five beauty ladies
Five beauty ladies

பாற்கடலில் அமிர்தத்தை கடைந்து எடுத்த போது அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுப்பதில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்த அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தேவர்கள் அமிர்தத்தை அருந்தி இருக்கிறார்கள்.

Five beauty ladies
Five beauty ladies

இரண்டாவது இடத்தில் இருக்க கூடிய அழகி திலோத்தமை. இந்த அழகி தேவலோகத்தில் வாழக்கூடிய அரம்பையர்களில் ஒருத்தி. இந்த அழகியின் பெயரை திலம் என்ற சொல் உள்ளது. திலம் என்றால் எள் என்று பொருள் தரும். எனவே எள் அளவும் குறையாத அழகு பெற்றவள் என்பதால் தான் இந்தப் பெயர் ஏற்பட்டது. பிரம்மாவின் கட்டளைப்படி சிலோதமையை விஸ்வகர்மா படைத்தார். அதுவும் இவரது படைப்பின் மூலம் சுந்தன், உபசுந்தன் என்ற அசுரர்களை அழிப்பதற்காக இந்த அழகியின் படைப்பு இருந்தது.

Five beauty ladies
Five beauty ladies

இதனை அடுத்து ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக வரும் சீதா பிராட்டி மிகச்சிறந்த அழகியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதுபோலவே மகாபாரதத்தின் கதாநாயகியான திரௌபதியும் பார்ப்பதற்கு பேரழகியாக இருந்திருக்கிறார். இன்றளவும் சீதா தேவியும், திரௌபதியும் பலராலும் வணங்கப்படக்கூடிய பெண் கடவுள்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பொறுமையின் பிறப்பிடமாக சீதா தேவியையும், அதீத கோபம் ஒரு பெண் கொண்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு திரவுபதியையும் உதாரணமாக கூறுகிறார்கள்.

Five beauty ladies
Five beauty ladies

கடைசியாக பேரழகி வருகையில் வருபவர் ஊர்வசி. தேவலோகத்தில் நடனமாடும் பெண்ணாக திகழக்கூடிய ஊர்வசி பலரையும் கவரக்கூடிய வகையில் அழகோடு இருப்பவர் இவரும் அரம்மையாக தோன்றியவர்.

இந்து மதம் கூறும் ஐந்து பேரழகுகள் யார் என்பது உங்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து இருக்கும் இவர்களை அடுத்து வேறு ஏதேனும் அழகிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.