மனக் கவலையை நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை தரும் வரிகள்..
வாழ்க்கை என்றாலே ஒரு போர் களம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழியில் தீர்க்க முடியாத போது நமக்குள் மன கவலை எழுவது இயற்கையான ஒன்றுதான்.
அந்த மனக் கவலையில் நீங்கள் ஆழ்ந்து இருந்து விடாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து முடியாது என்ற வார்த்தையை போட்டு உங்களை மேலும், மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்க கூடாது.
அது போன்ற மன அழுத்தம் உள்ள சமயத்தில் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை வரிகளைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை நீங்கள் தூரமாக வைத்து, உங்கள் இதயத்தை இன்பமாக வைத்துக் கொள்ள நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை உங்களுள் இருக்கும் வரை மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உங்களுக்கு இருக்காது.
உங்களுக்குள் ஏற்படும் தயக்கத்தையும், பயத்தையும் தள்ளி வையுங்கள். முதலில் பயத்தை தூக்கி போட்டாலே, உங்களது சிக்கல்கள் தீர்ந்து போகும் முயற்சியை பின் தொடரும்போது வெற்றி கிட்டும்.
நகரும் போது தான் நதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அது போலத்தான் செடி வளரும் போது பூவை கொடுக்கும். எனவே மனிதன் முயற்சி செய்வதின் மூலம் தான் எல்லாம் சிறப்பாக இருக்கும்.
எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் சோர்வடையாமல் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத நேரத்தை சந்திக்கும்போது, சலனம் இல்லாமல் சாதிப்பது எப்படி என்பதை பற்றி மட்டுமே யோசியுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் பல ஆயிரம் ஆச்சிரியங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
மனிதனின் வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். போராடி, போராடி தோற்று விட்டோமே என்ற சோர்வு உங்களுக்குள் ஏற்படாமல் இருந்தால் கண்டிப்பாக முயற்சி திருவினையாகும்.
பணம் இருப்பவர்களுக்கு மூலதனமாக பணம் இருக்கலாம். பணம் இல்லாதவன் அவன் முயற்சியை தான் மூலதனமாக மாற்ற வேண்டும் என்ற யுக்தியை தெரிந்து கொண்டால் மூச்சிருக்கும் வரை முயற்சி செய்வோம்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். எத்தகைய போராட்டத்திலும் சோர்வு அடையாமல் நம்பிக்கையை உங்கள் மனதிற்குள் ஆழமாக விதைப்பதின் மூலம் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.