“கோபுர கலசத்தில் மறைந்திருக்கும் அறிவியல் மர்மங்கள்..!”- ஆய்வு அலசல்..
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஒரு பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். கோவில் இருக்கக்கூடிய இடத்தில் மிக உயரமான கோபுரங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். இந்த உயரமான கோபுரங்களுக்கும் மேல் பல கலசங்கள் இருக்கும்.
அப்படி உயரமான கோபுரத்தின் மீது இந்த கலசங்கள் எதற்காக வைக்கப்படுகிறது. இந்த கோபுர கலசத்துக்குள் என்ன உள்ளது. இதில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் உண்மைகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே இந்த கோபுரத்தின் உயரத்தை விட அந்த ஊரில் இருக்கும் எந்த கட்டிடங்களும் உயரமாக இருக்கக் கூடாது என்ற விதி தொன்று தொட்டு இருந்து வருகிறது வருகிறது.
மேலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசமானது தங்கம், வெள்ளி, செம்பு அல்லது ஐம்பொன்களால் உருவாக்கப்பட்டு கலசத்தினுள் தானியங்கள் போடப்பட்டு வைக்கப்படுகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நிகழ்வு கட்டாயம் நிகழ்த்த வேண்டும் என்று ஆகம விதிகளில் வரையறுத்து இருக்கிறார்கள்.
கோபுர கலசங்களுக்குள் வைக்கப்படக்கூடிய தானியங்களுக்கு மின்காந்த அலைகளை ஈர்க்கக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளது. எனவே தான் கம்பு, நெல், கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை போன்ற தானியங்களை கோபுர கலசத்துக்குள் போடுவார்கள்.
இதில் குறிப்பாக வரகரிசியானது மின் ஆற்றலை அதிகம் தாங்கக்கூடிய சக்தி பெற்ற தானியமாக கருதப்படுகிறது. இந்த விஷயத்தை தற்போது அறிவியல் சார்ந்த நிபுணர்கள் தெரிவித்திருப்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் வரகானது எப்படி மின் அலைகளை தாங்கும் என்ற தகவல் நமது முன்னோர்களுக்கு எப்படி தெரிந்துள்ளது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இயற்கை சீற்றத்தால் விவசாயம் அழிந்தால் கூட மீண்டும் விவசாயம் செய்ய இந்த கோபுர கலசத்தில் இருக்கும் தானியங்களை பயன்படுத்த முடியும்.
மேலும் அந்தக் காலத்தில் தொடர் மழை அதிகளவு ஏற்படும்போது பள்ளமான இடங்களில் இருக்கக்கூடிய அனைத்து தானிய வகைகளும் அழிந்து போகக்கூடிய வாய்ப்புள்ளதால் உயரமாக இருக்கக்கூடிய கோபுரத்தின் உச்சியில் இயங்க தானியங்களை சேமித்திருக்கலாம்.
உயரமான கோபுரங்கள் இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் சேதம் அடையாமல் இருக்க அந்த மின் சக்தியை கிரகிக்கக்கூடிய தன்மை உள்ள தானியங்களை கலசத்துக்குள் வைத்து மிகப் பெரிய உண்மையை நமது முன்னோர்கள் மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு கோபுர கலசத்துக்குள் எதற்காக தானியங்களை வைக்கிறார்கள் என்பது மிக நன்றாக புரிந்து இருக்கும்.