“அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசிகள்..!” – சிறப்புக்கள் என்ன என்ன?
பாரம்பரிய அரிசி வகைகளில் கருப்பு கவுனி அரிசிக்கு என்று தனி இடம் உண்டு இந்த அரிசியை சீனா மற்றும் ஆசிய மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த அரிசியை அரசர் உணவு என்றுதான் கூறுவார்கள். ஏனென்றால் இந்த அரிசியானது மன்னர்களால் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது தான்.
மேலும் இந்த அரிசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சைடுகள், நார் சத்துக்கள் போன்றவை உள்ளதால் எளிதில் புற்றுநோய், சர்க்கரை நோய் ஏற்படாது. கல்லீரல் பாதிப்புகளை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உள்ளது. இதில் கொழுக்கட்டை, சாதம், தோசை போன்றவற்றை செய்து உண்ணலாம்.
அடுத்ததாக தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசியாக கருதப்படக் கூடிய மாப்பிள்ளை சம்பா அரிசி பற்றிதான் பார்க்க இருக்கிறோம். இந்த அரிசியில் அதிக அளவு மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவு உள்ளது. பண்டைய காலத்தில் இந்த உணவினை மணமக்களுக்கு சமைத்துக் கொடுப்பதன் காரணமாக தான் மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த அரிசியினை அதிக அளவு உட்கொண்ட மணமக்களின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்திய குறைபாடுகளை நீக்குகின்ற ஆற்றல் இந்த அரிசிக்கு உள்ளது. மேலும் அரிசியில் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
மூன்றாவதாக பூம்புகார் கைக்குத்தல் அரிசி பற்றி பார்க்கலாம் இந்த அரிசியில் அதிக அளவு அந்தோ சயனின் இருப்பதால் பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தனிமை சத்துக்கள் அதிகம் உள்ள இந்த அரிசியை உட்கொள்ளும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை ரத்தத்தில் கட்டுக்குள் இருக்கும் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கூடிய தன்மை இந்த அரிசிக்கு உள்ளது.
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த அரிசியை கட்டாயம் அவர்கள் டயத்தில் எடுத்துக் கொள்ளலாம் மாரடைப்பு வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இந்த அரிசியானது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு தேவையான போஷாக்கை தரக்கூடிய சக்தி கொண்டது.
அடுத்ததாக காட்டு யாணம் அரிசி பற்றி அறிந்து கொள்ளலாம் இந்த அரிசியை உட்கொள்வதின் மூலம் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் வலிமை பெற்று யானையின் எடையை கூட தாங்க கூடிய அளவு நீங்கள் வலிமை வாய்ந்தவர்களாக மாறுவீர்கள்.
மேலும் இந்த அரசியினை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு மலச்சிக்கல், புற்றுநோய், சர்க்கரை நோய் ஏற்படாது. 30 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய பெண்களின் எலும்பு அடர்த்தி குறைய கூடிய நிகழ்வினை தடுக்கக்கூடிய அற்புத சக்தி கொண்ட இந்த அரிசியை பெண்கள் அனைவரும் உட்கொள்வது நன்மை கொடுக்கும்.