நிலவில் பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது? மெய்சிலிர்க்க வைக்கும் 14 நாட்கள்..

Pragyaan Rover
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வந்து சேரும் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப தற்போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் சந்திரயான் 3-ல் இந்தியா படைத்திருக்கும் அபார வரலாற்று சிறப்புமிக்க சாதனை தான் என்று கூறலாம்.
இது வரை எந்த ஒரு உலக நாடும் அளப்பரிய சாதனையை செய்ய முடியவில்லை. எனவே முதலாவதாக நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்று தந்த இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமான நிலையை எட்டியது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நிலவில் எந்த ஒரு தடையும் ஏற்படாமல் நேர்த்தியான முறையில் தரை இறக்கப்பட்ட விக்ரம் லேண்டரில் உள்ள இருக்கக்கூடிய சாய்தளப்பாதை வழியாக வெளிவந்திருக்கும் பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் தன் வேலையை காட்ட ஆரம்பித்ததுள்ளது. இதனை இஸ்ரோ ஆய்வு மையம் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து தரையிறக்கப்பட்ட பிரக்யான் ரோவர் நிலவில் இஸ்ரோவின் லோகோவையும், இந்தியாவின் அசோகச் சக்கரத்தையும் ஆழமாக பதித்துள்ளது. அதை அடுத்து நிலவில் நடை போட்டு வரும் இந்த பிரக்யா ரோவர் அடுத்த 14 நாட்கள் முழுவதும் நிலவு பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களை நமக்கு அனுப்பி வைக்கும்.

இந்த ஆய்வில் நிலவில் இருக்கும் கனிமங்கள், வாயுக்கள், நிலவில் ஏற்படும் பூகம்பம் போன்றவற்றைப் பற்றி பிரக்யான் ஆய்வுகளை செய்யும். ஒரு லூனார் நாள் என்று அழைக்கப்படக்கூடிய 14 நாட்களுக்கு மட்டுமே இது வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நிலவில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படும் மீதி உள்ள சமயங்களில் இருளாகவே இருக்கும்.
இதனை அடுத்து பிரக்யான் தன்னுடைய அற்புதமான பணியை ஆரம்பித்து விட்ட நிலையை அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலம் சந்திரயான் 3 மிஷன் பரிபூரண வெற்றியை பெற்று உலக அரங்கில் சரித்திரம் படைத்து விட்டது என்று கூறலாம்.

இந்த புதிய சரித்திரத்தின் மூலம் இந்தியாவிற்கு விண்வெளி ஆய்வில் ஒரு மகத்தான இடம் கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும். 14 நாட்களுக்குப் பிறகு பிரக்யான் செயல் இழந்து விடும் என்ற கருத்தையும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்த ஆய்வுகளின் மூலம் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் உள்ளதா? என்பது மேலும் நமக்கு தெரியவரும். இதன் மூலம் நிலவில் மறைந்திருக்கக் கூடிய விஷயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும்.

மேலும் நிலவில் வெற்றி கொடியை நிலை நாட்டிய இந்திய விண்கலமான சந்திரயான் பெயரை சில பெற்றோர்கள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்து வருகிறார்கள்.