• December 4, 2024

“பாகிஸ்தானை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் நடிகை கருத்து..!”- இஸ்ரோவுக்கு வாழ்த்து..

 “பாகிஸ்தானை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் நடிகை கருத்து..!”- இஸ்ரோவுக்கு வாழ்த்து..

Sehar shinwari

வா தலைவா வா.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சந்திரயான் 3 சாதித்த சாதனையைப் பார்த்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பெருமையோடு பார்த்து வருகின்ற வேளையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருக்கும் நடிகை இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் நாடான பாகிஸ்தான் இன்னும் விண்வெளி துறையில் பின்தங்கி இருப்பதை நினைத்து வெட்கமாக உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்து அதிர வைத்து விட்டார்.

விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வுக்குப் பிறகு இதுவரை யாரும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளாத நிலையில், தற்போது பிரக்யான் அந்தப் பணியை மேற்கொண்டு வருவதின் மூலம் ஒரு புதிய சகாப்தத்தை இந்தியா படைத்து விட்டது.

Sehar shinwari
Sehar shinwari

இந்த சூழ்நிலையில் தான் நமது அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த சேஹர் ஷின்வாரி இந்தத் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் இந்த திட்டத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இவர் விண்வெளி துறையில் பின் தங்கி இருக்கும் தனது நாடான பாகிஸ்தானை தாக்கியும், விளாசியும் பேசி இருப்பது பலரது பார்வையில் தற்போது பேசும் பொருளாகி விட்டது என கூறலாம்.இதில் தன் கருத்தை மிகவும் தைரியமான முறையில் இவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

 அந்த பதிவில் தான் இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தனது நாட்டோடு உள்ள மோதலுக்கு அப்பால் இந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

Sehar shinwari
Sehar shinwari

அது இல்லாமல் தற்போது விண்வெளி ஆய்வை பொருத்தவரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள இடைவெளியை போல் சுமார் 30 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் பின்தங்கி உள்ளது, என்றால் அதற்குக் காரணம் நாமே தான் என்ற கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இந்தியா தற்போது உலக அரங்கில் அடைந்துள்ள நிலையை பார்க்கும் போது பாகிஸ்தானிகள் வெக்கி தலைகுனிய வேண்டும் என்ற கருத்தை கூறியதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் பின் தங்கி சென்றதற்கு காரணம் நாட்டின் நிலவும் சட்டம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் தான் எனவே அவற்றை நாம் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும், என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

Sehar shinwari
Sehar shinwari

மேலும் இந்தியாவின் இது போன்ற வெற்றியை பாகிஸ்தான் நெருங்குவது என்பது சுலபமானது அல்ல, என்பதை மீண்டும் இந்தியா நிரூபித்து விட்டது என்பது போன்ற கருத்துக்களையும் முன் வைத்திருக்கிறார்.