• July 27, 2024

தமிழன் சம்பிரதாயத்தில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகள்..!

 தமிழன் சம்பிரதாயத்தில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகள்..!

Tamil tradition

தமிழன் பகுத்தறிவு வாதம் பேசி பாழாய் போய் கொண்டிருக்கும் மனிதர்கள் கட்டாயம் நமது சம்பிரதாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்துமே மூடநம்பிக்கைகள் என்று கூறி அதை மூலையில் தள்ளி வரும் சமயத்தில் அதில் உள்ள அறிவியல் உண்மைகளை அவர்களின் மூளையில் உறைக்கும்படி எடுத்துச் சொல்லக்கூடிய அவசியமான காலகட்டத்தில் தான் இருக்கிறோம்.

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து எல்லாவிதமான வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மனிதர்களின் நாகரிகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் அவன் கடைபிடித்த சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றிலும் அறிவியல் உண்மைகள் ஒளிந்து கிடக்கிறது.

அதிலும் பெண்களுக்கு என்று வகுத்தபட்ட சம்பிரதாயங்களில் மெட்டி அணிதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மெட்டியானது திருமணம் ஆன பெண்கள் அணிய வேண்டியது.

Tamil tradition
Tamil tradition

திருமணமான பெண்கள் இந்த மெட்டியை காலில் இருக்கும் நடு விரலில் அணிவதின் மூலம் அதில் உள்ள நரம்பானது பெண்களின் கருப்பையில் இணைந்து இதயத்தின் வழியே செல்கிறது. எனவே மெட்டி அணியும் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் ரத்த ஓட்டம் சீராக அமையும்.

“நீறுல்லா நெற்றி பாழ்” என்ற என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். இந்த பழமொழி திருநீற்றுக்கு மட்டும் பொருந்தாது. பெண்கள் முகத்தில் இருக்கும் இரண்டு புருவங்களின் மத்தியில் கட்டாயம் பொட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் இவர்களின் ஆற்றல் சமநிலை ஏற்பட்டு நினைவாற்றல் அதிகரித்து முக தசைகள் பொலிவடைந்து முகச்சுருக்கங்கள் நீங்கும் என்பது தெரிந்தால் இனி எல்லா பெண்களும் கட்டாயம் பொட்டு இல்லாமல் வெளியே வர மாட்டார்கள்.

Tamil tradition
Tamil tradition

வளைகாப்பு செய்யும் போது கண்ணாடி வளையல்கள், அதிக அளவு பெண்களுக்கு போடப்படும். இதற்கு காரணம் இந்த கண்ணாடி வளையங்களை அணியும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நேர்மறை ஆற்றல் வளரும். மேலும் குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் கேட்கும் திறனை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கலகலவென்று சத்தமிடக்கூடிய  கண்ணாடி வளையல்களை அணிவிக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நம் சம்பிரதாயங்களில் இருக்கக்கூடிய உண்மையான காரண காரியங்கள் என்னவென்று இதை மறந்து நீங்கள் நாகரீக மோகத்தாலும், பகுத்தறிவுவாதி என்று பேசி வீணாய் போவதை விடுத்து நம் முன்னோர் வழியை பின்பற்றுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவீர்கள்.