சங்க நூல்களில் இந்தோனேசியா பற்றிய செய்திகளா? – தரணி ஆண்ட தமிழ் சமூகம்..!
சங்க கால நூல்களில் இந்தோனேசியாவை பற்றி பல செய்திகள் கிடைத்துள்ளதாக மொழியியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய பிலிப்பைன்ஸ்,மொலுக்காஸ் போன்ற தீவுகளை முந்நீர்ப்பழந்தீவு என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மேலும் மணிமேகலையில் எந்த தீவினை பன்னீராயிரம் தீவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜாவாவை சாவகத்தீபம், யாவ தீபம் என்றும் சுமித்ரா தீவை திருவிசயம், சொர்ண தீபம் என்று அழைத்திருக்கிறார்கள்.
இந்த தீவுகளுக்கெல்லாம் தமிழர்கள் சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகளும் பாடல் வரிகளில் உள்ளது. இவர்கள் இந்த வியாபாரத்திற்காக அந்தோமான் நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசிய தீவுகளுக்கு பண்டைய தமிழர்கள் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 700 தீவுகள் உள்ளது. அந்த தீவுப் பகுதிகளில் தமிழர்கள் சென்று வியாபாரம் செய்து இருப்பதற்கான விவரங்கள் கிடைத்திருக்கிறது. மேலும் ஜாவாவை சேர்ந்த மன்னர்கள் தமிழக அரச பரம்பரையோடு நெருங்கிய சம்பந்தம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது ஜாவாவில் உள்ள பழங்குடி மக்கள், திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரின் ஒருவராகிய படுகர் பெயர்களை கூறி வருகிறார்கள். மேலும் ஜாவா, சுமித்ரா பகுதிகளில் இந்திய குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம் என்று வெளிநாட்டு அறிஞர் ஜெ.குரோம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு சான்றாக இந்தோனேசியாவில் இருக்கக்கூடிய ஜாவா தீவில் கிடைத்த கல்வெட்டுகளில் பல்லவர்கள் காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமத்ரா தீவில் சோழர், பாண்டிய, பல்லவர்களின் பெயர்களைக் கொண்ட பழங்குடி மக்கள் இன்றும் வசித்து வருகிறார்கள். இவர்களது மூதாதையர் சேர, சோழ, பாண்டிய பல்லவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கி.பி 550 முதல் 750 வரை கடல் மார்க்கமாக இந்தோனேசியாவிற்கு தமிழர்கள் சென்றதற்கான சான்றுகள் இந்தோனேசியாவில் உள்ள கல்வெட்டுகளில் மூலம் நமக்கு கிடைக்க கிடைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோயிலில் பல கோயில்கள் உள்ளது. அதை குறிப்பாக தெற்கு பக்கத்தில் உள்ள மூன்றாவது கோயிலை இராசசிம்மனுடைய மனைவி ரங்கபாதகை தனது சொந்த செலவில் கட்டி இருக்கிறார். அதில் இவரது தந்தை சைவ அதிராஜாவின் பெயர் உள்ளது. இந்த ராஜா இந்தோனேசியாவை ஆண்ட சைலேந்திர அரசனையை காட்டுகிறது என்று தி.நா சுப்பிரமணியம் எழுதிய தி பல்லவாஸ் ஆப் காஞ்சி இன் சவுத் ஈஸ்ட் ஆசியா நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.