• October 5, 2024

பாண்டிய மன்னர்களின் கொடி மீன் – இதனை சிம்பாளிக்காக உணர்த்துகிறதா மதுரை மீனாட்சியின் பெயர்?

 பாண்டிய மன்னர்களின் கொடி மீன் – இதனை சிம்பாளிக்காக உணர்த்துகிறதா மதுரை மீனாட்சியின் பெயர்?

Pandyas

மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அந்த வகையில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் தான் பாண்டியர்கள். அவர்களின் கொடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.

மதுரையில் பாண்டிய குலத்தில் பாண்டிய மன்னரின் மகளாக , பாண்டியர் பேரரசியாக ஆட்சி புரிந்த மதுரை மீனாட்சி அம்மனின் பெயருக்கான காரணம் அவர்களது மீன் சின்னம் என்பது அவரது பெயரை பிரித்துப் பார்க்கும்போது எளிதில் விளங்கும்.மீன் + ஆட்சி = மீனாக்ஷி.

Pandyas
Pandyas

இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பலராலும் போற்றப்படக்கூடிய முக்கிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. மேலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை இந்த பாண்டியர்களுக்கே உரியது. முச்சங்கங்களை நடத்தி தமிழை வளர்த்தவர்களில் இவர்கள் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

சங்க காலத்திலும் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. அதில் குறிப்பாக கிபி 300க்கு பின் சங்க நூல்களில் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரும், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர்களும் உள்ளது.

மதுரையைத் தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வத்திற்கு முடிசூட்டு விழாவோ, திக்விஜயம் செய்யக்கூடிய வழக்கமோ கிடையாது. மேலும் பாண்டியர்களின் குலதெய்வம் என அவர்களுக்கு பிறந்த குழந்தையாகிய மீனாட்சியை கூறுகிறார்கள். பட்டம் சூடும் சமயத்தில் பாண்டியர்களின் குல சின்னமான வேப்பம்பூ மாலையை இன்றும் சூட்டுகிறார்கள்.

Pandyas
Pandyas

இன்றும் பாண்டியர்கள் கடைப்பிடித்த வழக்கங்கள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது பொருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோல சேர, சோழ மன்னர்கள் பயன்படுத்திய வழக்கங்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கிறதா? என்றால் சற்று யோசிக்க கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது.

எனினும் பாண்டியர்கள் படையில் இருந்து யானைகளும், குதிரைகளும் டெல்லியில் இருந்த முஸ்லிம் படைகளால் கவர்ந்து செல்லப்பட்டது. இதனால் பலவீனப்பட்டது பாண்டியநாடு .இந்த சமயத்தை பயன்படுத்தி சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரன் படையெடுத்து பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றினார்.