• October 13, 2024

அட நம்பிக்கையில் இத்தனை வகைகளா?- என்னென்ன பார்ப்போமா..!

 அட நம்பிக்கையில் இத்தனை வகைகளா?- என்னென்ன பார்ப்போமா..!

Belief

ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையோடு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தொன்று தொட்டு அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த நம்பிக்கையை உளவியல் ரீதியாக எட்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த எட்டு வகையான நம்பிக்கை மட்டும் மனிதனிடம் இருந்தால் மட்டுமே அவன் வாழ்வில் ஜெயிக்க முடியும்.

எட்டு வகையான நம்பிக்கைகள்

1.மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை.

2. உங்கள் மீது நீங்கள் வைக்கும் தன்னம்பிக்கை

3. தவறான நம்பிக்கை 

4.உங்கள் நடத்தையில் நம்பிக்கை 

5.உங்கள் உணர்ச்சியில் நம்பிக்கை 

6.ஆன்மீக நம்பிக்கை 

7.எளிய நம்பிக்கை 

8.உங்கள் நம்பிக்கையை வளர்ப்பது

மேற்கூறிய  நம்பிக்கைகள் அனைத்தும் நமது நல்ல வாழ்விற்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே இந்த நம்பிக்கைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடிப்பதின் மூலம் உங்களுக்கு நன்மை கட்டாயம் ஏற்படும். அதிலும் குறிப்பாக உங்கள் நம்பிக்கையை வளர்க்கக்கூடிய எட்டாவது வகை நம்பிக்கையை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி இலக்கை எளிதாக அடைந்து உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம்.

இன்று உள்ள சூழ்நிலையில் எல்லோரையும் எளிதாக நம்ப முடியாது சில சந்தர்ப்பங்களில் நம்மை ஏமாற்றவோ அல்லது நமது செயலை சாதகமாகவோ அவர்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காண நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு மனிதன் நம்பகத்தன்மையையும், நேர்மையையும் சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் இந்த இரண்டும் அவனுக்கு கிடைக்கும்.

Belief
Belief

எனவே மேற்கூறிய எட்டு நம்பிக்கைகளை உங்களோடு வளர்த்துக் கொள்வது கட்டாயமான ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அப்படி வளர்த்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் மிக நல்ல மனிதராக உங்கள் வீட்டுக்கும் மட்டுமல்லாமல் நாட்டிற்கும் சிறப்பான செயல்களை செய்ய முடியும்.

எனவே சிறு குழந்தையாக இருக்கும் போதே இதற்கான பயிற்சிகளில் நீங்கள் ஈடுபடுங்கள். கட்டாயம் தியானம் செய்வதின் மூலம் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதன் வழியே நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை செயல்படுத்த முடியும்.

மேலும் நீங்கள் தன்னம்பிக்கைக்கும், நம்பிக்கைக்கும் இடையே இருக்கின்ற வேறுபாட்டை கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்து கொண்டால் மட்டுமே அடுத்த அடியை உங்களால் எடுத்து வைக்க முடியும்.