• July 27, 2024

 “ஆடி மாதம் அம்மனுக்கு..  புரட்டாசி பெருமாளுக்கு..!” – சிறப்புக்கள் தெரியுமா?

  “ஆடி மாதம் அம்மனுக்கு..  புரட்டாசி பெருமாளுக்கு..!” – சிறப்புக்கள் தெரியுமா?

Purattasi

தமிழ் மாதங்கள் 12 உள்ளது. உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த 12 மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்பட்டு விமர்சையாக அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடுகள் நடக்கும்.

அது போலவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் மகாளயபட்ச காலத்தில் மத்யாஷ்டமி திதி உள்ளது. மேலும் புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன்.

Purattasi
Purattasi

பெருமாளின் சொரூபமாக புதன் இருக்கிறார். எனவே தான் புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடக்கூடிய மிக முக்கியமான மாதமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமையில் உமா மகேஸ்வரரின் அருள் கிடைக்க நீங்கள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்து 12 முடிச்சுகள் கொண்ட சரட்டை வலது கையில் கட்டிக்கொண்டு நீங்கள் விரதம் இருக்கும்போது உங்கள் சந்ததிகள் செழிக்கும், சௌபாக்கியம் கிடைக்கும்.

அது போலவே புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரனை நினைத்து அனுஷ்டிக்கப்படுகின்ற விரதத்தின் மூலம் நீங்கள் பரமேஸ்வரர் அருளை பெற முடியும்.

ஆனந்த விரதம் என்று சொல்லப்படுகின்ற வளர்பிறை சர்வசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் தான் இது. இந்த விரதத்தை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் ஐஸ்வரியங்கள் கிடைப்பதோடு, தீராத வினைகளும் தீரும்.

கபிலா ஷஷ்டி விரதம் என்பது புரட்டாசி மாதம் தேய்பிறை சஷ்டியில் சூரியனை பூஜை செய்ய உகந்த நேரமாக கருதப்படுகிறது. செவ்வரளியை கொண்டு பசுவை அலங்கரித்து இந்த விரதத்தை மேற்கொள்வதின் மூலம் சகல சக்திகளும் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த புரட்டாசி மாதத்தில் ஏழுமலையில் எழுந்து அருளி இருக்கும், திருமலை திருப்பதி வேங்கட பெருமாளுக்கு பிரம்மோற்சவம், கருட சேவைகள் என பல வகையான விழாக்கள் நடைபெறும்.

Purattasi
Purattasi

சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு மா விளக்கு ஏற்றி வழிபட சனியினால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் விலகிச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே புரட்டாசி ஒவ்வொரு சனிக்கிழமையும், நீங்கள் விரதம் இருந்து பெருமாளை தொழுவதின் மூலம் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கிடைக்கும்.

எனவே இந்த புரட்டாசி மாதம் நீங்களும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, உங்களது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் சனிக்கிழமை விரதம் இருப்பதால் கட்டாயம் உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.