• September 10, 2024

“அட்ரா சக்க.. ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய பூமி கண்டுபிடிப்பு” – அதுவும் நம்ம பிரபஞ்சத்தில்..

 “அட்ரா சக்க.. ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய பூமி கண்டுபிடிப்பு” – அதுவும் நம்ம பிரபஞ்சத்தில்..

Earth-like-planets

நீண்ட நெடு நாட்களாகவே விஞ்ஞானத்தில் முன்னேறி இருக்கும் மனிதன் தாங்கள் வாழும் பூமியை போல வேற்று கிரகத்தில் மனிதர்களைப் போல ஜீவராசிகள் ஏதேனும் உள்ளதா? என்ற தேடலை நெடு நாட்களாக தேடி வருகிறார்கள்.

தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் இந்த பிரபஞ்சத்தை தொலைநோக்கியின் மூலமாகவும், வேறு கருவிகளைக் கொண்டு அதன் நுணுக்கங்களை ஆய்வு செய்வதை விரிவு படுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

Earth-like-planets
Earth-like-planets

இது போன்ற சூழ்நிலையில் தான் ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் புதிது புதிதாக கண்டுபிடித்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் விளைவாக தற்போது பூமியை போன்ற ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஜப்பானின் ஒசோகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தில் தகாஷி  ஆகியோர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் புதிய பூமி போல உள்ள ஒரு கிரகத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இது சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதியில் அதாவது கைப்பர் பட்டை எனப்படுகின்ற பகுதியில் பனி பொருட்கள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது.

Earth-like-planets
Earth-like-planets

 மேலும் ஒன்பதாவது கிரகத்தை விட மிக அருகில் உள்ளது சூரிய குடும்பத்தில் இது போல பல கோள்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக ஆதியாக ஒரு கோள் இருக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

மேலும் கைப்பர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதால் அவை ட்ரான்ஸ் நெப்டியூன் பொருட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இவை சூரிய குடும்பம் உருவானதிலிருந்து எஞ்சியவை என்று வானவியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பாறை, உருவமற்ற கார்பன், நீர், மீத்தேன் போன்றவை ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் ஆனவையாகும்.

Earth-like-planets
Earth-like-planets

இதனை அடுத்து அண்மையில் இதன் அருகே ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு விசை இருந்ததை மற்றும் விசித்திரமான சுற்றுப்பாதைகள் உருவாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்களின் குழு கவனித்து உள்ளது. மேலும் இந்த கிரகம் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது என்ற கருத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

நெப்டியூனை விட சூரியனிலிருந்து 20 மடங்கு தொலைவில் சுற்றி வரும் இந்த கிரகம் பற்றி கூறுகையில் 450 கோடி வருடங்களுக்கு முன்பு சூரியன் உருவாகிய பிறகு அதை சுற்றிக் கொண்டிருந்த தூசுக்களும் வாயுக்களும் விண்கற்களும் ஈர்ப்பு விசையின் காரணமாக மோதி அந்த மோதலின் காரணமாக சூரியத் தொகுதியில் உள்ள எட்டு கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது மீறி இருந்தவை அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டு இருந்தது.

மேலும் கைப்பர் பட்டை பகுதியில் தான் பூமி போன்ற கிரகம் உள்ளது. எனவே இதை மீண்டும் நாம் ஆய்வு செய்வதின் மூலம் புதிய தகவல்கள் கிடைப்பதோடு பற்றிய அதிக அளவு தேடலுக்கு வித்திட்டுள்ளது என கூறலாம்.