• July 27, 2024

அட.. அது என்ன ராணி படிக்கிணறு? – எதற்காக கட்டமைக்கப்பட்டது..

 அட.. அது என்ன ராணி படிக்கிணறு? – எதற்காக கட்டமைக்கப்பட்டது..

Rani Ki Vav

ஒரு ராணிக்காக இவ்வளவு மிகப்பெரிய படி கிணறு கட்டப்பட்டுள்ளதா? என்ற நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த படிக்கிணறானது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பதான் நகரத்தில் அமைந்துள்ளது.

மிக பசுமையான புல்வெளி பகுதியில் நடுவே அமைந்திருக்கும் இந்த கிணறை “ராணி கி வாவ்” என்று அழைக்கிறார்கள். இந்த கிணறானது சொலாங்கி வம்சத்தை சேர்ந்த முதலாம் தேவ் மன்னரின் நினைவாக அவரது மனைவி ராணி உதயமதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான பணியானது இவருடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் கட்டி முடிக்கப்பட்டது.

Rani Ki Vav
Rani Ki Vav

சுமார் 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட ஏழு அடுக்குகள் கொண்ட படிக்கிணறாக திகழ்கிறது. இதன் கடைசி படிக்கட்டுக்கு கீழ் முப்பது கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை சித்பூருக்கு செல்கிறது. போர்க்காலங்களில் அரச குடும்பத்தினர் டாப்பி செல்வதற்காக இது போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கிபி 1063 முதல் கிபி 1068 வரை இந்த கிணறை கட்டியிருக்கிறார்கள். காலப்போக்கில் இந்த கிணறு மணலால் மூடப்பட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் தெரியாமல் போய்விட்டது.

இதனை அடுத்து 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்ட இந்த கிணறு 14 ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கிணறு. இந்த கிணறை சர்வதேச புராதான சின்னமாக ஐநா சபையின் யுனெஸ்கோ அமைப்பு 2014ல் அறிவித்து அங்கீகாரம் அளித்தது.

Rani Ki Vav
Rani Ki Vav

இந்த படித்துறை கிணற்றில் விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாக கன்னிகள், கண்ணாடியை பார்த்து பொட்டு வைக்கும் பெண்கள், யானைகள் போன்ற பல வகையான சிற்பங்கள் பக்கபாட்டுத்துறை சுவரில் மிகவும் சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு இருக்கக்கூடிய தூண்களில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகிறது. கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிணறானது மழை நீரை சேமிக்கும் இடமாகவும் இருந்துள்ளது. குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கக்கூடிய இந்த கிணறு ஆனது சுமார் ஐந்து அடுக்குகளோடு கட்டப்பட்டுள்ளது.

Rani Ki Vav
Rani Ki Vav

இந்த கிணறை பார்ப்பதற்கு செவ்வக வடிவத்தில் இருந்தாலும் இதன் மேல் கூரை ஆனது முக்கோண வடிவில் காணப்படுகிறது.இது முழுவதும் மூடப்படாமல் சூரிய வெளிச்சமும் காற்றும் உள்ளே வரும்படி அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த படிக்கிணறு எப்போதும் குளிர்ச்சியாகவே உள்ளது.

 தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் முன்னோர்கள் தங்களது மடி நுட்பத்தையும் கட்டிடக்கலையின் சிறப்பையும் சிறப்பிக்கும் வகையில் இதுபோன்ற படிக்கிணறுகளை அமைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.